சிலம்பரசனும் – வடிவேலையும் மீண்டும் இணைக்கும் இயக்குனர் மிஷ்கின்

நடிகர் உதயநிதியின் ‘சைக்கோ’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 திரைப்படத்தினை இயக்கிவந்தார்.

அந்த திரைப்படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இப்படத்திலிருந்து வெளியேறினார். இயக்குனர் மிஷ்கின்

இதனை அடுத்து சிலம்பரசன் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.

தற்போது ‘மாநாடு’ திரைப்படத்தில் சிலம்பரசன் நடித்து வருவதால், அதன் படப்பிடிப்பு முடித்த கையோடு இயக்குனர் மிஷ்கின் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிலம்பரசன் -மிஷ்கின் கூட்டணி திரைப்படத்தில் ‘வைகைப் புயல்’ வடிவேலு நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இயக்குனர் ஹரி இயக்கிய் ‘கோவில்’ படத்தில் சிலம்பரசன்-வடிவேலு கூட்டணி சிறப்பாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.