உலக சாதனை புரிந்த மறைந்த பழம் பெரும் இயக்குனர் நடிகை விஜய நிர்மலா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் – நடிகை கீர்த்தி சுரேஷ்

உலக சாதனை புரிந்த மறைந்த பழம் பெரும் நடிகையும் இயக்குனருமான விஜய நிர்மலா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகை இயக்குனர் விஜய் நிர்மலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் நிர்மலா அவர்கள் வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் பழம் பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு மையப்படுத்தி எடுக்கப்பட்ட (மகாநடி) என்ற திரைப்படத்தில் சாவித்திரியாக வாழ்ந்து காட்டினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதே திரைப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது.

இந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு வரலாற்று காவியத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ்யுடம் பேச்சுவார்த்தை நடந்தது வருகிறது.

மறைந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது.

மறைந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவை பற்றி சில குறிப்புகள்.

மச்ச ரேகை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘எங்க வீட்டு பெண்’, ‘பணமா பாசமா’, ‘என் அண்னன்’, ‘ஞான ஒளி’ போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் விஜய் நிர்மலா

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 200 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் மட்டுமே 44 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அதிக திரைப்படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்றதோடு கடந்த 2002ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இடம்பெற்றார்.

உலக சாதனை புரிந்த பெண் இயக்குனர் நடிகை விஜய நிர்மலா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட் உள்ளது.