நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படத்தை OTT இனையத்தில் வெளியிட தயாரிப்பாளர் திட்டம்

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அனைத்து துறைகளும் முடங்கியுள்ளது.

திரைத்துறையும் முடங்கியுள்ள நிலையில் சில தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களை நேரடியாக OTT இனையத்தளத்தில் அதாவது ஆன்லைனில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆன பின்னரே ஆன்லைனில் வெளியிட அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது அடுத்த ஜீன் மாதம் இது வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். இப்பட பர்ஸ்ட் லுக் வெளியான போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

error: Content is protected !!