எங்கள் படத்தை அங்கீகரிக்கப்படாத செயலி அல்லது இணையதளத்தில் பார்த்தால் காப்புரிமை சட்டம் பாயும் *ஒன்பது குழி சம்பத்* திரைப்பட தயாரிப்பாளர் திருநாவுக்கரசு- எச்சரிக்கை.

இன்று 74 வந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுமுகம் நடிகர் பாலாஜி மற்றும் நடிகை நிகிலா விமல் நடித்துள்ள ஒன்பது குழி சம்பத் ஆன்லைனில் வெளியானது.

புதுமுக இயக்குநர் ரகுபதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை திருட்டுத்தனமாக ஆன்லைனில் இந்த திரைப்படத்தை பார்த்தால் காப்புரிமை சட்டம் பாயும் என எச்சரித்துள்ளார்
தயாரிப்பாளர் திருநாவுக்கரசு.

அதுபற்றிய விவரம் வருமாறு…

தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பார்த்தாலோ அல்லது டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பக்கங்களில் பகிர்ந்தால் அவர்களின் மீது காப்புரிமை சட்டம் பாயும் என தெரிவித்துள்ளார்.

இதனால் சட்டத்திற்கு புறம்பான இணையதளங்களில் படம் பார்ப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் 3,00,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ…

error: Content is protected !!