எனக்கும் ப்ரியங்காவிற்கும் விருது நிச்சயம்” – *வழக்கு எண் முத்துராமன்*

“வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது இந்த ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்..

தமிழ் சினிமாவில் பெண் காவலர்களை பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் “மிக மிக அவசரம்” படம் அவற்றில் இருந்து தனித்து நிற்கும் விதமாக வெளியாகியுள்ளது.

அதனால்தான் ரசிகர்களின், குறிப்பாக தாய்மார்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது.

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் எல்லோரும் வெறுக்குமளவிற்கு சைலண்ட் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வழக்கு எண் முத்துராமன், படம் பற்றி கூறும்போது,

“இந்த படம் போலீஸ் சம்பந்தமான கதை என்றாலும் பொதுமக்கள் அனைவருக்குமே பொருந்தும்..

அன்றாட வாழ்க்கையில் எல்லாருமே பார்த்திருக்கக் கூடிய விஷயம் தான், ஆனால் அதை நின்று நிதானமாக கவனித்திருக்க மாட்டோம்..

அந்த ஒரு நூலிழைப் பாயிண்டை தான் இயக்குநர் சுரேஷ் காமாட்சி தனது திரைக்கதையால் பிரமாதப்படுத்தியிருக்கிறார்..

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாராலும் யூகிக்க முடியாத ஒன்று..

நான் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், இந்தப்படத்தில் எனது கதாபாத்திரம் இதுவரை நான் நடிக்காத ஒன்று..

வழக்கு எண் படத்தில் போல இந்த படத்திலும் எனக்கு, எனக்கு மட்டுமல்ல இந்த படத்திற்கும் படத்தில் கதாநாயகி ஸ்ரீ பிரியங்காவுக்கும் கூட விருது கிடைக்கும் என்பது நிச்சயம்..

இந்த படத்தின் இயக்குநரே தயாரிப்பாளரும் என்பதால் எங்களுக்கு பல விதங்களில் உதவியாக இருந்தது..

எல்லோரிடமும் அவர் நட்பாகப் பழகி வேலை வாங்கியதால் படப்பிடிப்பு நடந்த அனைத்து நாட்களிலும் ரொம்பவே கலகலப்பாக சென்றது..

ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை வெளியிட்டுள்ளது.