ஆஸ்கர் 4 விருதுகள் வென்ற திரைப்படத்தின் மீது ‘மின்சார கண்ணா’ தயாரிப்பாளர் வழக்கு.?
ஆஸ்கர் 4 விருதுகள் வென்ற திரைப்படத்தின் மீது ‘மின்சார கண்ணா’ தயாரிப்பாளர் வழக்கு.?
2020 ஆண்டு அண்மையில் 92வது ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டது.
கொரியன் படமான பாராசைட் என்ற படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் எடுக்கப்பட்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று பாராசைட் படம் வரலாறு படைத்துள்ளது.
ஆனால் இந்த திரைப்படத்தின் கதை கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான ‘மின்சார கண்ணா’ படத்தின் கதையை தழுவி இருப்பதாக கூறப்படுகிறது.
காப்பியடித்த திரைப்படத்துக்கு இத்தனை ஆஸ்கர் விருதுகளா? என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளதாவது… இத்தனை வருடம் கழித்தும் மின்சார கண்ணா படம் பேசப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால் பட கதை உரிமை குறித்து தயாரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
தற்போது இப்பட தயாரிப்பாளர் வழக்கு தொடரவுள்ளதாக கூறப்படுகிறது.











