எனது மகளுக்கு அரசியலில் ஈடுபடும் என்னமோ இல்லை” – கீர்த்தி சுரேஷ் தாயார் மேனகா சுரேஷ்.

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அரசியலில் ஈடுபடும் எந்தத் காலத்திலும் இல்லை என அவரின் தாயார் மேனகா சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் திரைப்பட நட்சத்திரங்களின் புகைப்படங்கள் குறித்தும் அவர்களின் சொந்த வாழ்க்கை குறித்தும் செய்திகள் வருவது இயல்பான ஒன்றுதான்.

அந்த வகையில் கடந்த வருடம் இதே நாளில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்த செய்தி ஒன்று இணையத்தளத்தில் வைரலாக பரவியது.

அந்தச் செய்தி என்னவென்றால் நடிகை கீர்த்தி சுரேஷ் பா.ஜ.க வில் இணையப் போகிறார் என்பதுதான்.

அத்துடன் இந்தச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் தாயாரான மேனகா சுரேஷ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இது குறித்து அவர் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரதமர் மோடியுடன் எடுத்த கொண்ட புகைப்படம் எனது கணவர் சுரேஷ் பா.ஜ.க உறுப்பினர்களைச் சந்தித்த போது எடுத்த புகைப்படம். ஆகவே நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அரசியலில் ஈடுபடும் எந்தத் திட்டமும் இல்லை  எனக் கூறியுள்ளார்.

தளபதி நடிகர் விஜயுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு  திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தெலுங்கு, மலையாளம் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!