என்ஜிகே-விற்கு யு சான்று

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல்பிரீத்சிங், சாய் பல்லவி, குருசோமசுந்தரம், வேலராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள படம் என்ஜிகே. யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படம் வருகிற மே 31-ந்தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் என்ஜிகே படம் சென்சார்போர்டு அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது. படத்தைப்பார்த்த அதிகாரிகள் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதையடுத்து என்ஜிகே படத்தின் பிரமோசன் பணிகள் தீவிரமடைந்துள்ளது.