ஒட்டு மொத்த மீடியாக்களின் கோபத்திற்கும் ஆளாகியிருக்கிறார் நடிகை குஷ்பூவின் திமிரான பேச்சு ஆடியோ ரூபத்தில் ஆப்பு.!
 திரைப்பட உலகிற்கு வரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகள்… இவர்கள் பிரபலமாக ஆவதற்கு மீடியாதான் ஒரே காரணம்.
திரைப்பட உலகிற்கு வரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகள்… இவர்கள் பிரபலமாக ஆவதற்கு மீடியாதான் ஒரே காரணம்.
இவர்களில் ஒரு சிலர் மட்டுமே புகழின் உச்சத்திற்கு சென்றுவிட்டால் மீடியாகளை மதிப்பதே கிடையாது.
இந்த வரிசையில் நடிகை குஷ்பூவும் தற்போது தன்னையும் இணைத்து கொண்டுள்ளார் என கூறலாம்.
அவர் தனது திரையுலக சம்பந்தபட்ட ஒரு குரூப்பில் ஆடியோ வெளியிட அதுவே தற்போது அவருக்கு ஆபத்து (ஆப்பு) ஆக அமைந்துள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகம் உள்ள நிலையில் ஒரு சில தளர்வுகள் மற்றும் விதிமுறைகளுடன் டிவி சீரியல் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
டிவி சீரியல் படப்பிடிப்பு நடத்துபவர்களுக்கு நடிகை குஷ்பு ஒரு ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் தேவை இல்லாமல் பத்திரிகையாளர்களை ஒருமையில் அவன் இவன் என விமர்சித்துள்ளார்.
இந்த ஆடியோ லீக்கான நிலையில் ஒட்டுமொத்த மீடியாக்களின் கோபத்திற்கும் ஆளாகியிருக்கிறார் நடிகை குஷ்பு.
மேலும் நடிகை குஷ்பூ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வந்துள்ளன.











