ஒத்தசெருப்பு’ திரைப்படம் தேசிய விருது கிடைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம்

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவது தொடர்பானஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

இதில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, ‘ஒத்தசெருப்பு’ தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல். ஆஸ்கர் விருதுக்கு தகுதியான திரைப்படம் ஒத்தசெருப்பு. தேசிய விருது கிடைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம் என்றார்.

முன்னதாக பேசிய பார்த்திபன் ‘ஒத்த செருப்பு’ திரையரங்கில் வெளியாகி இரண்டு வாரங்களான நிலையில், பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவதால்,

‘ஒத்தசெருப்பு’ படத்தை திரையரங்குகளில் இருந்து தூக்கியிருப்பது வேதனை அளிப்பதாக கூறினார்.