ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் விரைவில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது இயக்குநர் நடிகர் பார்த்திபன்

சென்னை 18 மே 2021

ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் விரைவில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது இயக்குநர் நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன.

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7.

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் இயக்குநர் நடிகர் பார்த்திபன்.

இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும்.

நடிகர் இயக்குநர் பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் அவர் மட்டுமே டயலாக் பேசுவார்.

இந்த திரைப்படத்தை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர்.

இந்த திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது.

இந்த நிலையில், ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட உள்ளதாக நடிகர் இயக்குநர் பார்த்திபன் அறிவித்துள்ளார்.

ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் இந்தி மொழி மாற்றத்தில் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆங்கில மொழி மாற்றத்தில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் பார்த்திபன் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார்..

error: Content is protected !!