ஒரே படம்… 6 கதை… 6 ஹீரோ… 6 ஹீரோயின்… 6 இசையமைப்பாளர்6 எடிட்டர்கள் புதியதாக களம் இறங்கும் சிம்புதேவன்..!

இயக்குனர் சிம்புதேவன். இவர் இயக்கிய ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” படம் பெரிய வெற்றி பெற்றது.

காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலுவை ஹீரோ லெவலில் உயர்த்தியதும் இவர்தான்.

இதையடுத்து பல ஆண்டுகள் கழித்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகம் எடுக்க அறிவிப்பு வெளியானது. மீண்டும் வடிவேலு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஏனோ படப்பிடிப்பு தொடங்காமலேயே படம் நிற்கிறது.

இந்த நிலையில் சிம்புதேவன் அடுத்த படத்தை தொடங்கியுள்ளார்.

சிம்புதேவனின் புதிய படத்தில் ஆறு கதைகள் உள்ளதாம்.

ஆறு கதையும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் ஆறு ஹீரோக்கள், ஆறு காமிராமேன்கள், ஆறு எடிட்டர்கள், ஆறு ஹீரோயின், ஆறு இசையமைப்பாளர்கள் என புதுமையாக உருவாக்கப்படவுள்ளது.

இதில் நான்கு ஹீரோக்களாக ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர்கள் நடிக்கவிருப்பதாகவும் இன்னும் இரண்டு ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்திற்கு தமிழின் வல்லின எழுத்துக்களான ‘கசடதபற’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு எழுத்தும் ஒரு ஹீரோவின் பெயர்களில் உள்ள எழுத்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியும் டிரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

ஏற்கனவே இதுபோல் 3 கதைகள் 3 ஹீரோக்களை வைத்து கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை தயாரித்திருந்தார்.