Monday, September 20
Shadow

காடன் திரை விமர்சனம். ரேட்டிங் –3.25/5

நடிகர் நடிகைகள் – ராணா டக்குபதி, விஷ்ணு விஷால், ஜோயா ஹுசைன் சம்பத் ராம் மற்றும் பலர்.

தயாரிப்பு – ஈராஸ் இன்டர் நேஷனல், ஈராஸ் மோஷன் பிக்சர்ஸ்

இயக்கம் – பிரபு சாலமன்

ஒளிப்பதிவு – ஏ ஆர் அசோக் குமார்

படத்தொகுப்பு – புவன் ஸ்ரீனிவாசன்

இசை – ஷாந்தனு மொய்த்ரா.

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

திரைப்படம் வெளியான தேதி – 26 மார்ச் 2021

ரேட்டிங் –3.25/5

மக்களின் பிரச்சினைகள், நாட்டின் பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றித்தான் அதிகமான திரைப்படங்கள் வந்துள்ளன.

ஆனால், காட்டு விலங்குகளின் பிரச்சினைகளைப் பற்றி சொல்லும் திரைப்படங்கள் இதுவரையில் திரைப்பட உலகில் வந்திருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

காடன் எனும் கதாபாத்திரத்தில் திரைப்படத்தின் கதாநாயகன் ராணா டகுபதி நடித்துள்ளார்.

பல ஆயிரம் கணக்கான ஏக்கர் காட்டைப் பாதுகாக்கவும் அங்குள்ள யானைக் கூட்டங்களை மனித வேட்டையிலிருந்து காப்பாற்றவும் காட்டுவாசியாகவே வாழ்ந்து வருகிறார்.

அந்த காட்டின் ஒரு பகுதியை அமைச்சர் ஒருவரின் தனது சுய லாபத்துக்காக அழிக்க முயல்கிறார்.

இதனால் அங்குள்ள யானைகளின் வாழ்வாதாரம் அழியும் நிலைமை ஏற்படுகிறது.

இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவே காட்டுவாசிகளுடன் இணைந்து போராடி வரும் காடன் கடைசியில் தோல்வி அடைந்தாரா இல்லை வெற்றியடைந்தாரா என்பதுதான் இந்த காடன் திரைப்படத்தின் கதை

இயற்கை அழகு சார்ந்த திரைப்படங்களை எடுத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமாக முத்திரை பதித்தவர் இயக்குநர் பிரபு சாலமன்.

அவர் இயக்கிய திரைப்படங்கள்
மைனா, கும்கி ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குநர் பிரபு சாலமன்.

நடிகர் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி திரைப்படத்திற்கு பிறகு சுமார் 5 வருடம் கழித்து காடன் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

மைனா, கும்கி போலவே இந்த திரைப்படமும் காடு சார்ந்த படம் என்பதால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இயக்குநர் பிரபு சாலமன்.

அடர்ந்த காடு பகுதி மிக தத்ரூபமான யானை கூட்டம் படம் பார்க்கும் நம்மை ஒரு காட்டுக்குள் கொண்டு சென்று பிரமிக்க வைக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

பெங்களூரு நாட்கள், பாகுபலி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரைப்பட உலகில் உள்ள ரசிகர்களை கவர்ந்த ராணா டகுபதி.

இந்த திரைப்படத்திலும் அதை தவறாமல் செய்துள்ளார்.

வழக்கம் போல இல்லாமல் ஒரு காட்டுவாசியகவே தன்னை வருத்தி கொண்டு இந்த திரைப்படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக கும்கி யானையுடன் வரும் விஷ்ணு விஷால் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.

Read Also  கல்தா திரை விமர்சனம். ரேட்டிங் - 2/5

எதிர்பார்த்த அளவிற்கு ஸ்க்ரீன் ஸ்பேஸ் இல்லை.

இந்த திரைப்படத்தின் இரண்டு கதாநாயகிகளுக்கும் பெரிய அளவு பங்கு இல்லை.

எல்லோரும் கொடுத்த வேலையை மிக கனகச்சிதமாக செய்து இருக்கிறார்கள் .

கும்கி திரைப்படத்தில் விக்ரம் பிரபு தோன்றிய காட்சிகள் தான் கொஞ்சம் தூசி தட்டி விஷ்ணு விஷாலுக்கு கொடுக்க பட்டு இருக்கிறது.

முடிந்தவரை அந்த கதாபாத்திரத்தை மிக நன்றாகவே நடித்து உள்ளார்

இயக்குனர் பிரபு சாலமன் எடுத்துக் கொண்ட கருவும், கதையும் மிக மிகச் சிறப்பு. ஆனால், அதை திரைக்கதை வடிவமாக்கி சுவாரசியமாகத் தருவதில்தான் பாதை மாறிவிட்டார். திரைக்கதையில் எந்த ஒரு விறுவிறுப்போ, திருப்பமோ இல்லாததுதான் குறையாகிவிட்டது.

சில காட்சிகளில் அவரை கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காட்டியிருக்கத் தேவையில்லை.

இந்திய அரசிடமிருந்து விருது வாங்கிய ஒரு கதாபாத்திரத்தை யாரோ ஒரு மனிதர் போல பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள்.

விஷ்ணு விஷால், கும்கி யானையை வைத்திருப்பவராக நடித்திருக்கிறார்.

வழக்கம் போல கூடவே இருக்கும் ஒரு மாமா கதாபாத்திரம், தம்பி ராமையாவை நடிக்க வைத்தால் கும்கி படம் போல வந்துவிடும் என இப்படத்தில் தெலுங்கு நடிகரை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

விஷ்ணுவும் இக்கதாபாத்திரத்தில் வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவருடைய யானை விபத்தில் சிக்கியதும் அவர் கதறித் துடிக்கும் போது நமக்கு கலங்கிவிடுகிறது.

இடைவேளைக்குப் பிறகு அவர் கதாபாத்திரம் மீண்டும் வரும் என்று எதிர்பார்த்தால் இயக்குனர் ஏமாற்றிவிட்டார்.

சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய படம் என்று வரும் போது எப்படியாவது ஒரு கதாபாத்திரத்தையாவது பத்திரிகையாளர் என வைத்துவிடுவார்கள்.

அப்படி இந்தப் படத்திலும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது, அவர்தான் படத்தின் கதாநாயகி.

காட்டில் திரியும் தீவிரவாதப் பெண்ணாக இரண்டாவது கதாநாயகி.

அவரைப் பார்த்ததும் விஷ்ணு விஷால் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இரண்டு கதாநாயகிகளுமே ஒரு பக்கம் வசனம் பேசியிருந்தால் அதிகம்.

எடுத்துக் கொண்ட கதைக்காக மட்டும் பாராட்டலாம். இந்த ஆண்டிற்கான சிறந்த சுற்றுச்சூழல் படத்திற்கான தேசிய விருதைப் பெறும் தகுதி இந்தப் படத்திற்கு உண்டு.

காடன் – காட்டின் பசுமை காவலன்

CLOSE
CLOSE