தாராளபிரபு திரை விமர்சனம். ரேட்டிங் – 3/5

நடிப்பு – ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக்
சச்சு, அனுபமா, நமோ நாராயணா, ஆர்எஸ் சிவாஜி, மற்றும் பலர்

தயாரிப்பு – ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட்

இயக்கம் – கிருஷ்ணா மாரிமுத்து

ஒளிப்பதிவு – செல்வகுமார் எஸ் கே

எடிட்டிங் – கிருபாகரன் புருஷோதமன்

இசை – அனிருத் ரவிச்சந்தர்,
பரத் சங்கர்,
இன்னோ கெங்கா,
கபேர் வாசுகி,
மேட்லி ப்ளூஸ்,
ஊருகா – தி பேன்ட்,
ஷான் ரோல்டன்,
விவேக் மெர்வின்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

திரைப்படம் வெளியான தேதி – 13 மார்ச் 2020

ரேட்டிங் – 3/5

 

தமிழ் திரைப்பட உலகில் எத்தனையோ வேறு மொழி திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது

அப்படி மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு திரைப்படம்தான் தாராள பிரபு

ஹிந்தியில் 2012ம் வருடம் வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்கி டோனர் என்ற திரைப்படம்
அந்த திரைப்படத்தை எட்டு வருடங்கள் பிறகு அதிகாரப்பூர்வமாக
தமிழ்த் திரைப்படமாக ரீமேக் செய்து உள்ளனர்

நமது நாட்டு கலாச்சாரத்திற்கும், திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதை களம் இல்லை என்று சொன்னால் இந்த திரைப்படத்தை கலகலப்பான சுவாரசியமான தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றது போல் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து.

இந்த தாராள பிரபு திரைப்படத்தைப் பார்த்த பிறகு ரசிகர்கள் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பலர் இப்படிப்பட்ட தானத்திற்கு சம்மதித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

கால்பந்து வீரராக வரும் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண், அவரது தாய் அனுபமா மற்றும் பாட்டி சச்சு உடன் சந்தோஷமாக வாழ்கிறார்.

தாய், பாட்டி இருவரும் நடத்தும் பாரம்பரியம் என்ற அழகு நிலையத்திலும் உதவியாக இருக்கிறார். கதாநாயகன் ஹரிஷ் கல்யாண்,

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்பது தான் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் அவரது மனதில் ஒரு லட்சியமாக உள்ளது.

சென்னை பாரீஸ் கார்னரில்
செயற்கை கருத்தரிப்பு மையம் நடத்தி வருபவர் டாக்டர்   விவேக் ஊரெல்லாம் ஒரு ஆரோக்கியமான திடகாத்திரமான, கெட்ட பழக்கங்கள் இல்லாத விந்து கொடுக்கும் டோனரை தேடி வருகிறார் விவேக். அந்த நேரத்தில் தான் விவேகிற்கு, கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் அறிமுகம் ஆகிறார்.

முதலில் விந்து தனத்தை ஏற்க மறுக்கும் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் பின்பு ஒத்துக்கொள்கிறார்.

விந்து தானம் செய்வதை தாய்க்கும் பாட்டிக்கும், காதலிக்கும் தெரியாமல் மறைத்து நிறைய பணம் சம்பாதிக்கிறார்.

Read Also  ஆறடி - திரை விமர்சனம்

ஒரு கட்டத்தில் கதாநாயகன் ஹரிஷ் கல்யாணுக்கு கதாநாயகி தன்யாவுக்கும் திருமணம் நடக்கிறது. இந்த விந்தணு தானம் செய்வதால் ஹரிஷ் கல்யாண் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனை என்ன? அதை எப்படி சமாளித்தாரா இல்லையா என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் மீதிக் கதை.

ஹரிஷ் கல்யாணுகும், தன்யா ஹோப்க்கும் திருமணம் நடக்கிறது. ஆனால், தன்யாஹோப்க்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையில் அவருடைய கர்ப்பப்பை இல்லை. என்று டாக்டர் கூறிவிடுகிறார்

கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் இந்தக் கதையை பொருத்தமான தேர்வு. திரைப்படத்திற்கு படம் அவரது நடிப்பை மெருகேற்றி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே கண்ணதாசனாக வரும் விவேக் தான். நீண்ட நாட்களுக்கு பிறகு படம் முழுவதும் ஸ்கோர் செய்து இருக்கிறார்

விவேக் – கதாநாயகன் ஹரிஷ் கல்யாணம் இணைந்து வரும் காட்சிகள் அனைத்துமே படு சூப்பர். இவர்களது இருவரது கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க் அவுட்டாகியுள்ளது.

காமெடி காட்சிகளைத் தாண்டி சென்டிமென்ட் காட்சிகளில் கூட தன்னை நிரூபித்திருக்கிறார். கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் இவருடைய சினிமா வாழ்க்கையில் இந்த தாராள பிரபு திரைப்படத்துக்கு கண்டிப்பாக ஒரு தனி இடம் உண்டு.

திரைப்படத்தின் கதாநாயகியாக தான்யா ஹோப் நடிப்பில் கவர்கிறார். கதாநாயகன் ஹரிஷ் கல்யாணனின் தாயாக அனுபமா, பாட்டியாக சச்சு இருவருமே தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்

49 பேர் குடும்ப வாழ்க்கையில்
குழந்தை ஆசையைத் தீர்த்தவருக்கு, தன்து வாழ்க்கையிலேயே பிரச்சினை வர கவலை கொள்கிறார்.

ஒரு பக்கம் மனைவி, மறுபக்கம் தாய், இன்னொரு பக்கம் டாக்டர் என சிக்கித் தவிக்கும் ஒரு கதாபாத்திரம். நடிப்பைப் பொறுத்தவரையில் ஹரிஷ் கல்யாண், சபாஷ் சொல்ல வைக்கிறார்.

முதல் பாதி மிகவும் கலகலவென ஜாலியாக செல்கிறது. இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சம் தொய்வு அடைகிறது. அதற்கு மட்டும் எடிட்டர் கொஞ்சம் நிலத்தை குறைத்திருக்கலாம்

எஸ் கே செல்வகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி. தருகிறது
அனிருத், ஷான் ரோல்டன், விவேக் – மெர்வின், மேட்லி ப்ளூஸ் என 8 இசையமைப்பாளர்கள் இணைந்து பாடல்களை உருவாக்கியுள்ளனர்.

ஆனால் அனிருத் இசையில் வரும் பாடல் மட்டுமே தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம்
செய்திருக்கலாம்

ரீமேக் திரைப்படம் தானே என்ற மொத்தத்தையும் காப்பி பேஸ்ட் செய்யாமல், திரைக்கதையில் சில இடங்களை மட்டும் மாற்றி தரமான படத்தை தந்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து.

விந்து தானம் பற்றி சொல்லும் திரைப்படம் என்றாலும், எந்த இடத்திலும் முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லாமல் படத்தை எடுத்த விதத்தை இயக்குனர் கிருஷ்ணா மாரிபுத்தூர்
சபாஷ் சொல்லலாம்.

Read Also  எட்டுத்தீக்கும் பற திரை விமர்சனம். ரேட்டிங் - 1.5./5

தமிழகத்தில் விந்து தானம் என்ன என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். இந்த திரைப்படத்தின் மூலம் என்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.

காமெடி, சென்டிமெண்ட் மற்றும் எமோஷன் என இரண்டையுமே தேவையான அளவிற்கு வைத்துள்ளார் இயக்குனர். கிருஷ்ண மாரிமுத்து

இந்த “தாராள பிரபு” உயிரோட்டம் அதிகம்