Monday, October 26
Shadow

காட் ஃபாதர் திரை விமர்சனம். ரேட்டிங் – 3./5

நடிப்பு – நட்டி, அனன்யா, மாரிமுத்து, லால், மாஸ்டர் அஸ்வந்த மற்றும் பலர்

தயாரிப்பு – ஃபர்ஸ்ட் கிளாப் என்டர்டெயின்மென்ட்ஸ் & ஜி.எஸ் ஆர்ட்ஸ்

இயக்கம் – ஜெகன் ராஜசேகர்

ஒளிப்பதிவு – என்.ஷன்முக சுந்தரம்

எடிட்டிங் – புவன் சீனிவாசன்

இசை – நவீன் ரவீந்திரன்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

திரைப்படம் வெளியான தேதி – 21பிப்ரவரி 2020

ரேட்டிங் – 3./5

 

சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கதாநாயகன் நட்ராஜ், தன் மனைவி அனன்யா, மகன் அஸ்வந்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மிகவும் சாதுவான கதாநாயகன் நட்ராஜ், எந்த பிரச்சனைக்கும் செல்லாமல், தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கிறார்.

இதே பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் லால், 13 வருடத்திற்கு பிறகு பிறந்த தனது மகன் மீது மிகவும் பாசமாகவும் அன்பாகவும் இருக்கிறார். இந்த மகனுக்கு இதய நோய் ஏற்படுகிறது.

தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்றால் அவனது குரூப் ரத்தம் மற்றும் அதே வயதில் உள்ள சிறுவன் வேண்டும் என்று டாக்டர் கூறுகிறார்.

என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் லால், கதாநாயகன் நட்ராஜ் மகனின் ரத்தம் மற்றும் இதயம் தன் மகனுக்கு பொருந்தும் என்பதை அறிந்துக் கொள்கிறார். இதனால், கதாநாயகன் நட்ராஜின் மகனை கொன்று இதயத்தை எடுத்து தனது மகனுக்கு பொருத்த நினைக்கிறார். லால் இதையறிந்த கதாநாயகன் நட்ராஜ் தனது மகனின் உயிரை காப்பாற்ற மிகவும் போராடுகிறார்.

இறுதியில் லால் தனது திட்டத்தை முடித்து மகனை காப்பாற்றினாரா? கதாநாயகன் நடராஜ் தனது மகனை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.

திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் நட்ராஜ், பொறுப்பான கணவராகவும், பாசமான அப்பாவாகவும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.

குறிப்பாக தனது மகனை காப்பாற்ற முயற்சிக்கும் காட்சியில் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் கலாநாயகி அனன்யா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கணவரின் அமைதியான குணத்துக்கு நேர் எதிரான குணத்தையும் அதே நேரத்தில் மகன் ஆபத்தில் சிக்கியதும் அவர் காட்டும் பரிதவிப்பும் மிக சிறப்பு.

வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் லால். தான் நினைத்தவர்கள் எல்லோரையும் கொன்று குவிக்கும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரின் மிரட்டல் நடிப்பு திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சின்ன சின்ன அசைவுகளால் ரசிக்க வைத்திருக்கிறார் சிறுவன் அஸ்வந்த். வில்லன்களிடம் இருந்து தப்பிக்க அவர் மறைக்கப்படும் காட்சிகள் திகிலூட்டுகின்றன.

Read Also  வால்டர் திரை விமர்சனம். ரேட்டிங் - 2./5

சிறிய கதையை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெகன் ராஜசேகர். குறைந்த நடிகர்களை கொண்டு ஒரு அபார்ட்மெண்டுக்குள்ளேயே கதையை முக்கால்வாசி நகர்த்தி இருக்கிறார். லாஜிக் மீறல்கள் மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மிகவும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு சமமாக திகிலூட்டுகின்றன. நவின் ரவீந்தரனின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்.

மொத்தத்தில் ‘காட் ஃபாதர்’ மிகவும் கனகச்சிதமான காட் ஃபாதர்.