பாரம் திரை விமர்சனம். ரேட்டிங் – 2 /5
நடிப்பு – ராஜு, சுகுமார் சண்முகம், ஸ்டெல்லா கோபி,சமராஜா, பிரேம் நாத், நந்தினி, நட்ராஜ், முத்துக்குமார், ஜெயலட்சுமி மற்றும் பலர்
தயாரிப்பு – ரெக்லஸ் ரோசஸ்
இயக்கம் – பிரியா கிருஷ்ணசாமி
ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்
எடிட்டிங் – பிரியா கிருஷ்ணசாமி
இசை – வேத் நாயர்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா ரேகா D.one
திரைப்படம் வெளியான தேதி – 21 பிப்ரவரி 2020
ரேட்டிங் – 2 /5
2018ம் ஆண்டிற்கான 66வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்திற்கான விருதைப் பெற்ற படம் இது படத்தைப் பார்க்கும் போது ஒரு முழுநீளத் திரைப்படமாக இல்லாமல் ஒரு டாகுமென்டரி படம் பார்த்த உணர்வுதான் ஏற்பட்டது.
அழுத்தமான கதையோ, திரைக்கதையோ, சினிமா இலக்கணத்திற்குள் அடங்கிய கேமரா கோணங்களோ இல்லாமல் இருக்கும் ஒரு படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது என்பது ஆச்சரியம் தான். ஆனால் என் இந்த திரைப்படத்திற்கு எதற்காக தேசிய விருது வழங்கப்பட்டது என தெரியவில்லை.
ஒரு காலத்தில் தமிழ்நாடன் தென்பகுதி மாவட்டங்களில் வழக்கத்தில் இருந்த தலைக்கூத்தல் என்ற விஷயத்தை திரைப்படத்தின் மையக்கருவாக வைத்திருக்கிறார்கள். இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி
அதெல்லாம் காணமால் போய் எவ்வளவோ ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இப்போதும் அது போல நடப்பதாகக் காட்டியிருப்பது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும். என் தெரியவில்லையா இந்த இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமிக்கு
சமீபத்தில்தான் இந்த தலைக்கூத்தல் விஷயத்தை வைத்து கே.டி என்கிற கருப்புதுரை படம் வெளிவந்தது. இந்தப் திரைப்படத்திலும் முதன்மைக் கதாபாத்திரத்தின் பெயரை கருப்பசாமி என வைத்திருக்கிறார்கள்.
கருப்பசாமி என்பவர் மகனின் ஆதரவு இல்லாமல் தன்து தங்கை வீட்டினரின் ஆதரவுடன் வாழ்ந்து வருகிறார். வயதானாலும் செக்யூரிட்டி வேலை செய்கிறார். பிழைப்பை நடத்துகிறார்
ஒரு நாள் விபத்தில் சிக்கி அவரது இடுப்பு எலும்பு முறிந்து படுத்த படுக்கை ஆகிறார். டாக்டர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்கிறார்.
ஆனால், அவரது மகன் அறுவை சிகிச்சை செய்ய எனக்கு எந்த வசதியில்லை எனக் கூறி அப்பாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று நாட்டு வைத்தியம் செய்து கொள்வதாகக் கூறுகிறார்.
இதனிடையே, அப்பாவை கருணை கொலை செய்ய சிலர் வந்து சொல்ல அதன்படியே செய்கிறார். மகன். விஷயமறிந்த கருப்பசாமியின் தங்கை குடும்பத்தினர் அதை மீடியாவிற்குக் கொண்டு செல்கின்றனர். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.
திரைப்படத்தில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும்மே புதுமுகங்கள்தான். அனைவரையும் முடிந்தவரை இயல்பாக நடிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி.
கருப்பசாமியின் தங்கையாக நடித்திருக்கும் ஜெயலட்சுமி அம்மாள், அவரது மகன்களாக நடித்திருக்கும் பிரேம்நாத், சுகுமார் சண்முகம் இவர்கள் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
கருப்பசாமி விபத்தில் சிக்கி சாலையில் விழுந்த உடனே உடனடியாக 108க்கு போன் செய்யாமல் அவரை ஒரு வீட்டின் முன் சில மணி நேரம் படுக்க வைக்கிறார்கள்.
இந்தக் காலத்தில் இப்படி கூட செய்வார்களா என்பது உள்ளிட்ட சில கேள்விகள் இந்த திரைப்படத்தில் அதிகமாக இருக்கின்றன.
தலைக்கூத்தல் என்பது பற்றித்தான் படம் வெளிப்படுத்த நினைக்கிறது. ஆனால், கருப்பசாமிக்கு அப்படி செய்யாமல் விஷ ஊசி போட்டு கொலை செய்கிறார்கள்.
சரி, தலைக்கூத்தல் செய்வது கொடும் குற்றம், மன்னிக்க முடியாதது என்று சொல்லி படத்தில் கருப்பசாமியைக் கொன்றவர்களைத் தண்டனைக்குள்ளாக்கினால் நன்றாக இருந்திருக்கும்.
ஆனால், சாதி பிரச்சினை, தேர்தல் வருகிறது எனச் சொல்லி சட்டத்தின் ஓட்டைகளை வைத்து இந்த திரைப்படத்தை முடித்திருப்பது சரியா என கேள்வி கேட்க வைக்கிறது.
வேத் நாயர் பின்னணி இசை அமைத்திருக்கிறார். திடீரென அமைதி, திடீரென இசை என ஒரு நேர்த்தியான இசை இல்லை. ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவன் கேமராக கையில் வைத்துக் கொண்டே படத்தை எடுத்திருப்பார் போலிருக்கிறது.
நமது நாடு முழுவதும் பழைய சம்பிரதாயங்கள் பல இருந்தன. ஆனால், அவையெல்லாம் காலப் போக்கில் போய்விட்டன. அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து இப்போதும் நடப்பது போல காட்டுவது உலகத்தின் முன் நம்முடைய தமிழனின் கலாச்சாரத்தை குறைத்து மதிப்பிட வைக்கும் ஒன்றாகவே இருக்கும்.
திரைப்படம் எடுக்க தெரியாத இயக்குனர் என்பது உறுதி செய்யப்பட்ட திரைப்படம்
பாரம் – முழுமையாக இல்லாததால் படம்











