Tuesday, October 20
Shadow

காலேஜ் குமார் திரை விமர்சனம். ரேட்டிங் – 2.25/5

நடிப்பு – ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, நாசர், மதுபாலா.சாம்ஸ் மற்றும் பலர்

தயாரிப்பு – எம்ஆர் பிக்சர்ஸ்

இயக்கம் – ஹரி சந்தோஷ்

ஒளிப்பதிவு – குரு பிரசாத்

எடிட்டிங் – கெர்ரி மற்றும் பவன் கல்யாண்

இசை – குதுப் இ கிரிபா

மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு

திரைப்படம் வெளியான தேதி – 6 மார்ச் 2020

ரேட்டிங் – 2.25/5

2016ம் ஆண்டு வெளிவந்த அமலா பால், , சமுத்திரக்கனி நடித்த அம்மா கணக்கு என்ற படம் வெளிவந்தது. அந்த திரைப்படத்தின் கதை போல் தான் உள்ளது இந்த காலேஜ் குமார் திரைப்படமும்

அம்மா கணக்கு அமலா பாலும் பள்ளியில் அதே போல் வகுப்பில் 10வது சேர்ந்து படிக்கிறார்.

அந்த அம்மா கணக்கு திரைப்படத்தின் கதையை அப்படியே அம்மா மகள் என இல்லாமல் அப்பா, மகன் என மாற்றி ஒரு கதை திரைக்கதை எழுதி கன்னடத்தில் 2017ம் ஆண்டில் காலேஜ் குமார் என்ற பெயரில் வெளியிட்டு பெரிய அளவில் வெற்றிபெற்ற. அந்தப் திரைப்படம்தான் தற்போது தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

இந்த படம் ஒரு அப்பா தான் எடுத்த சபதத்திற்காக தன் மகனை நம்பி இருக்கிறார். அதை கண்டுகொள்ளாத மகன், வயது கோளாறில் கண்டதை செய்கிறான்.

இதற்கு பின் அப்பா என்ன செய்தார் மகன் என்ன செய்தான் என்பதே காலேஜ் குமார் படத்தின் கதை.

இந்த படம் கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்றது .
கன்னட மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வந்துள்ள திரைப்படம்தான் இந்த காலேஜ் குமார்

படிப்பதற்கும் பட்டம் வாங்குவதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதைச் சொல்லும் திரைப்படம் தான் இந்த காலேஜ் குமார். மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என கனவு காணும் பெற்றோர்களுக்கும், அவர்களின் கனவைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படாத மகன்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் இந்த திரைப்படம்.

இந்த திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே நண்பனின் ஆடிட்டர் அலுவலகத்தில் பியூனாக பணிபுரிகிறார் பிரபு. மகன் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் பிரபு நண்பனால் அவமானப்படுத்தப்படுகிறார்.

அப்போது பிறக்கும் தன் மகனை பெரிய ஆடிட்டர் ஆக்குவேன் என சபதம் எடுக்கிறார்.

ஆனால், வளர்ந்து கல்லூரிக்குச் செல்லும் அவரது மகன் தந்தையின் கனவு, சவால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கல்லூரியில் பொறுப்பற்று நடந்து கொண்டதால் கல்லூரியை விட்டே நீக்கப்படுகிறார்.

அப்போது தந்தைக்கும், மகனுக்கும் நடக்கும் சண்டையில் தந்தை பிரபு, தானே கல்லூரிக்குச் சென்று படித்து ஆடிட்டர் ஆகிறேன் என சவால் விடுகிறார். அது நிறைவேறியதா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

Read Also  தும்பா - திரை விமர்சனம்

35 வருடங்களுக்கு முன்பாக சின்னப்பூவே மெல்லப் பேசு திரைப்படத்தில் நம்ம காலேஜில் டெஸ்ட்டு வச்சா போரடிக்குது என்று ஆடிப்பாடிய பிரபு, இப்போது பொறுப்பான தந்தையாக அப்படியெல்லாம் நடக்கக் கூடாது என மகனுக்கு அட்வைஸ் செய்கிறார். எந்த மகனுக்குத்தான் தந்தையின் அட்வைஸ் பிடிக்கும். அப்படி பொறுப்பில்லாத மகனாக தன் முதல் திரைப்படத்திலேயே நன்றாகவே நடித்திருக்கிறார் கதாநாயகன் ராகுல் விஜய்.

இடைவேளைக்குப் பின் அவருடைய கதாபாத்திரத்திலும் பெரும் மாற்றம். வாழ்க்கையில் முன்னேற படிப்பு மட்டுமே காரணமல்ல என்பதையும் புரிய வைக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் அவ்வளவு பொருத்தமாக பிரபு. கல்லூரி மாணவனாக அவர் செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் ஜாலியாகவே நகர்கின்றன அந்தக் காட்சிகள். படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கிறது பிரபுவின் கதாபாத்திரம்.

இந்த திரைப்படத்தின் மிகப் பெரும் மைனஸ் என்றால் மதுபாலா தான். அவருடைய மும்பைத் தமிழ் பேச்சும், அவருடைய எக்ஸ்பிரஷன், பாடி மொழி எதுவுமே ஒரு சராசரி படிக்காத ஒரு தாயின் கதாபாத்திரத்திற்குத் துளி கூட ஒட்டவே இல்லை. வேறு யாரையாவது நடிக்க வைத்திருந்தால் அம்மா கதாபாத்திரம் நன்றாகவே இருந்திருக்கும்.

இந்த திரைப்படத்தின் அறிமுகக் காட்சியில் கதாநாயகி பிரியா வட்லமானி பார்ப்பதற்கு தமன்னா போல இருக்கிறார்.

அதன் பின் அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகு அவருக்கும் தமன்னாவுக்கும் தம்மாத்தூண்டு கூட பொருத்தமில்லை என்பதை படம் பார்க்கும் ரசிகர்களை உணர வைக்கிறார்.

இந்த திரைப்படத்தை பெங்களூருவிலேயே எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருப்பவர்கள் கூட கன்னட முகங்களாகவே தெரிகிறார்கள்.

அதெல்லாம் ஒரு கன்னட டப்பிங் திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வையே இந்த திரைப்படம் ஏற்படுத்துகிறது.

இசை, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு எல்லாமே சுமாராக உள்ளது. மேக்கிங்கிலேயே இது சிறிய பட்ஜெட் படம் என்பதை காட்சிக்குக் காட்சி உணர்த்துகிறார்கள்.

சொல்ல வந்த கருத்து நல்ல கருத்து, அதை சொன்ன விதம்தான் சரி இல்லை

காலேஜ் குமார் – நல்ல கருத்து உள்ள திரைப்படம்