Thursday, January 21
Shadow

காவல்துறை உங்கள் நண்பன் திரை விமர்சனம் ரேட்டிங் – 2.25 /5

நடிப்பு – சுரேஷ்ரவி, ரவீனாரவி, மைம் கோபி, சூப்பர் குட சுப்பிரமணி, ஆர். ஜெ.முன்னா, சரத் ரவி, இ.ராமதாஸ்.

தயாரிப்பு – பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன், ஒயிட் மூன் டாக்கீஸ்.

இயக்கம் – ஆர்.டி.எம்

ஒளிப்பதிவு – கே. எஸ். விஷ்ணு ஸ்ரீ

எடிட்டிங் – வடிவேல் – விமல் ராஜ்.

இசை – ஆதித்தியா – சூரியா

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா ரேகா D’ONE

வெளியான தேதி – 27 நவம்பர் 2020

ரேட்டிங் – 2.25 /5

 

திரைப்பட உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் விஷயம் ஒன்று காவல்துறை. வெளிவரும் அனைத்து திரைப்படங்களில் ஒரு காட்சியாவது காவல் நிலையத்தில் இல்லாமல் இருக்காது.

காவல்துறையை பெருமைப்படுத்தி பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.

அதே சமயம் காவல்துறையை சிறுமைப்படுத்தியும் சில திரைப்படங்கள் வந்திருக்கின்றன.

இந்த காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படம் காவல்துறையை கேவல ப்படுத்தி வந்திருக்கிறது.

இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் எத்தனையோ காவல்துறையை சேர்ந்த காவலர்கள் எத்தனையோ பேர் மக்களுக்காக சேவை ஆற்றி தங்கள் உயிரை நீத்துள்ளனர்.

இந்த சமயத்தில் இப்படி ஒரு திரைப்படம் வருவது மனதுக்கு வருத்தம் அளிக்கிறது.

இந்தப் திரைப்படத்தை ஒரு யதார்த்த திரைப்படம் போல காண்பித்து விட்டு, பல இடங்களில் முக்கியமான லாஜிக்குகளை இயக்குநர் விருப்பத்திற்கு ஏற்றது போல் எழுதி இருப்பார்கள் போல பல சீன்களில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

இயக்குனர் ஆர்எம்டி-க்கு காவல்துறை மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை.

வழிப்பறி திருடர்களில் ஒருவன் கதாநாயகி ரவீனா ரவியை கட்டிப் பிடிக்கிறான்.

அவர்களை தேடி கதாநாயகன் சுரேஷ் ரவியும் கதாநாயகி ரவியும் தேடி அலைகின்றனர்.

அப்போது இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரி கதாநாயகன் சுரேஷ் ரவி கதாநாயகி ரவினா ரவியை வழி மறித்து விசாரிக்கிறார்கள்.

இதில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் மைம் கோபிக்கும் சுரேஷ் ரவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

காவல்துறை அதிகாரிகளை எதிர்த்து பேசுவதால் கோபமடையும் மைம் கோபி, சுரேஷ் ரவியை அடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் பல சித்திரவதைகளை அனுபவிக்கும் சுரேஷ் ரவி, இதிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பதுதான் இந்த காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகன் சுரேஷ் ரவி சென்னையில் உணவு டெலிவரி செய்து வருகிறார்.

இவரது மனைவி கதாநாயகி ரவினா ரவி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

Read Also  கபிலவஸ்து- விமர்சனம்

இவர்கள் இருவரும் இருவருக்கு குடும்பத்தாரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

சென்னை புறநகரில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு நாள் கதாநாயகி ரவினா ரவி வேலை முத்து விட்டு இரவில் தனிய நடந்து வரும் போது வழியில் வழிப்பறி திருடர்கள் மூன்று பேர் வழிப்பறி செய்து விட்டு ஒருவர் மட்டும் கதாநாயகி ரவினா ரவியை கட்டிப்பிடித்து விட்டு செல்கிறார்.

இதனால் கவலைப்படும் கதாநாயகி ரவினா ரவி நடந்ததை கதாநாயகன் சுரேஷ் ரவியிடம் கூற இருவரும் மூன்று இளைஞர்களை தேடி பைக்கில் கிளம்புகிறார்.

கதாநாயகன் சுரேஷ் ரவி. வழியில் ஒரு காவல்துறை அதிகாரி சோதனைக்கு வழிமறிக்க அவர்களிடம் வாக்குவாதம் ஏற்படுகிறது.

அப்போது சுரேஷ் ரவி காவல்துறை அதிகாரியிடம் சொல்லும் ஒரே ஒரு வார்த்தையினால் அவரது வாழ்க்கையே மொத்தமாக மாறிப் போகிறது.

கதாநாயகன் சுரேஷ் ரவி, தார்மீகமான கேள்விகள், கோபம் எழும்போதும்,

சரி ஒதுங்கிப் போவோம் என முடிவெடுத்து மன்னிப்புக் கேட்கும்போதும் மிக யதார்த்தமாகத் தெரிகிறார்.

காதல் காட்சிகளில் மட்டும் இன்னும் பயிற்சி அதிகம் தேவை.

பின்னணி குரல் கலைஞராக ரவீனா ரவி ஏற்கனவே தனது குரல்வள நடிப்பில் நிரூபித்தவர்.

திரை நடிப்பில் நிரூபிக்கும் அளவுக்கான காட்சிகள் இதில் இல்லை என்றாலும் பாவப்பட்ட ஒரு இளம் பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறார்.

நடிப்பிலும் கதையிலும் ராட்சசனாக இருப்பவர் மைம் கோபியே.

அவர் பல முறை நடித்த வில்லன் கதாபாத்திரம் என்றாலும் இந்த மொத்தப் படமும் அவரது வில்லத்தனத்தை சார்ந்தே இருக்கிறது என்பதால், நடிப்பில் அதன் வீரியத்தை அதிகரித்து கதாபாத்திரம் மீதான ரசிகர்களின் கோபத்தைக் கச்சிதமாகச் சம்பாதித்துக் கொள்கிறார்.

அவருடனே வரும் ஆர்ஜே முன்னா உதட்டோரம் நக்கலான சிரிப்பிலேயே வில்லத்தனத்தைக் காட்டி கவனிக்க வைக்கிறார்.

காவல் நிலையத்தில் ஒரு நல்ல போலீஸ்காரரும் இருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கிறார் நமது சூப்பர் குட் சுப்பிரமணி இவர் கடைசியில் கதாநாயகி ரவினா ரவியுடன் பேசிவிட்டு செல்லும்போது காட்சியில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

சூப்பர்குட் சுப்பிரமணியை ஒரு நல்ல காவலராகக் காட்ட முயற்சிக்கிறார்கள்.

ஆனால், அவரும் கடைசியில் கைவிரித்துவிட்டுப் போய்விடுகிறார்

இரட்டை இசையமைப்பாளர்கள் ஆதித்யா மற்றும் சூர்யாவின் இசையில் காதல் பாடல் இனிமை பின்னணி இசை கதையை அழுத்தமாகக் கூற உதவியிருக்கிறது.

காவல் நிலையத்தைக் காட்டும்போது வெப்பமான வண்ணங்கள், காதல் ஜோடிகளைக் காட்டும்போது குளிர்ச்சியான வண்ணங்கள் என விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவு படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறது.

யதார்த்தமான ஒரு மனிதருக்கு பிரச்சினை வரும் நமக்கும் கூட இப்படி நடந்திருக்கிறதே அல்லது நடந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறதே என அனைவராலும் புரிந்துகொள்ள முடிகிற தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிற கதையும் அது அக்கறையுடன் சொல்லப்பட்ட விதமும்தான் திரைப்படத்தின் முக்கியமான சிறப்பம்சம். ஒவ்வொரு படியாக கதாநாயகன் சுரேஷ் ரவி காவல்துறையிடம் பிரச்சினையில் சிக்குவது, மீண்டுவிட்டோம் என்று நினைக்கும்போது வேறு ஏதோ வழியில் அவரை வேண்டுமென்றே அதிகார வர்க்கம் சீண்டுவது எனத் தொடர்ந்து ரசிகர்களைப் பதைபதைப்போடு வைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்டிஎம்.

Read Also  மிக மிக அவசரம் திரை விமர்சனம்

ஒவ்வொரு முறையும் கதாநாயகன் சுரேஷ் ரவி காவல் நிலையத்துக்குள் அடியெடுத்து வைக்கும்போது நம் அடிவயிறு கலங்குகிறது,

அந்த அளவுக்குக் கதாபாத்திரத்தின் அச்ச உணர்வை நம்மையும் உணர வைக்கிறார்.

உச்சகட்டக் காட்சியில் கதாநாயகன் சுரேஷ் ரவியின் செயல் அதன் விளைவுகள் இரண்டுமே நம்பும்படி சொல்லப்பட்டிருப்பது இந்த திரைப்படத்தில் நம்ப முடியவில்லை.

‘விசாரணை’ என்கிற திரைப்படம் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் நுணுக்கமாகக் கையாண்ட விஷயத்தைப் பொட்டில் அடித்தாற் போல முகத்துக்கு நேரே சொல்லியிருப்பதுதான் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் சாதகம், பாதகம் இரண்டுமே.

முதல் காட்சியிலேயே இதுதான் முடிவு என்று சொல்லிவிட்டு ஆரம்பிப்பது, கதையின் வசதிக்காக ஒரு காவல்துறை அதிகாரி கூட நேர்மையானவர் என்று காட்டாமல் போனது பிரதான கதாபாத்திரம் மீது ஊடக வெளிச்சம் விழுந்த பின்னும் அவர் அதைவைத்து புத்திசாலித்தனமாக எதுவும் யோசிக்காமல் இருப்பது என ஒரு சில விஷயங்களில் சறுக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்டிஎம்

‘விசாரணையோடு ஒப்பீட்டளவில் பார்த்தால் பரவாயில்லை ரகம் என்று சொல்லவைக்கும் படம் இந்தக் ‘காவல்துறை உங்கள் நண்பன்’.

எந்த ஒரு காட்சியிலாவது பழிக்குப் பழி வாங்குவார் என்று எதிர்பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றமே.

அவரைப் பார்த்து அந்த ஸ்டேஷன் எஸ்.ஐ. முதல் சாதாரண காவலர் வரை அப்படி பயப்படுகிறார்கள். அவரே கதாநாயகன் சுரேஷ் ரவியை அடிப்பதை வீடியோ எடுப்பாராம் அவரே செய்தி சேனலுக்கும் அனுப்புவாராம் பிறகு அவரே நேரலையில் வந்து அந்த வீடியோ பற்றி பேசுவாராம் நம்பமுடியவில்லை.

ஒரு விசாரணைக் கைதியை காவல்துறையினர் கொடுமைப்படுத்துவது டிவி சேனல்களில் ஒளிபரப்பாவதை ஒரு கமிஷனர் ஒரு ஐ ஜி டிஜிபி ஒரு அமைச்சர் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கூடவா பார்த்திருக்க மாட்டார்களா?

தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக பதவியில் இருக்கிறார் மைம் கோபி. அதோடு சீருடை அணியாத சில காவலர்கள் வந்து லாக்கப்பில் இருந்து சுரேஷ் ரவியை எங்கோ தூக்கிச் செல்கிறார்கள்.

இன்றைய சமூக வலைத்தள யுகத்தில் ஒரு சாத்தான்குளம் நடந்த லாக்கப்பில் விவகாரத்துக்கே எவ்வளவு பரபரப்பு ஏற்பட்டது என்பதை இன்னும் நாம் மறந்திருக்க மாட்டோமே.

காவல்துறை உங்கள் நண்பன் எனப் பெயர் வைத்துவிட்டு மக்களின் எதிரி ஆகவே காட்டியிருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தைப் பார்க்கும் நேர்மையான, பொறுப்பான காவல்துறையினருக்கு கண்டிப்பாக கடும் கோபம் வர வாய்ப்புள்ளது.

அந்த அளவிற்கு படத்தில் நேர்மையில்லை.

காவல்துறை உங்கள் நண்பன் – காவல்துறையை களங்கம் ஏற்படுத்தி விட்டது.

CLOSE
CLOSE