கே 13 – திரை விமர்சனம்

ஆறாது சினம், டிமாண்டி காலனி பட வரிசையில் 
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை தொடர்ந்து 
அருள்நிதி மற்றுமொரு வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்திருக்கும் படம் தான் கே-13. சஸ்பென்ஸ் த்ரில்லரை தேர்ந்தெடுத்துள்ளார் அருள்நிதி, ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே  திரையரங்கிற்கு நம்பி போகலாம் என்ற எண்ணம் மக்களிடையே  இளைஞர்களிடமும் உருவாகிவிட்டது. அந்த வகையில்  ஒரு படம் தான் கே-13 இந்த படமும் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா என்று பார்ப்போம்.
 
அருள்நிதி தொடர்ந்து ஒரு சஸ்பென்ஸ் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், அந்த வகையில் இதுவும் அவருக்கு ஒரு சிறந்த படமே, படத்தில் அவரின் கதாபாத்திரமே பெரும்பாலும் வருகின்றது. அதனால் எந்த ஒரு இடத்திலும் கவனம் சிதறவிடாமல் அவரின் பதட்டத்தையும் நடிப்பையும் நம்மிடம் கடத்துகின்றார்.
 
எஸ்.பி. சினிமாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் 
அருள் நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், யோகி பாபு 
ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர் இணைந்து நடித்து
3ம் தேதி வெளியாகி இருக்கும் படம் தான் கே13.
 
13 நம்பர் வீடு,  படத்தை தொடர்ந்து இன்னொரு 13ம் நம்பரை வைத்து உருவாக்கியுள்ள படம் கே13. ஆனால், அந்த படங்களை போல இதுவும் பேய் படம்தானா என்று நினைத்தாள் இது பேய் படம் இல்லை. ஆனால்,  சைலன்ஸ் த்ரில்லர் படம் தான். கே 13
 
படத்தின் கதைக்களம் :
 
 திரைப்பட துறையில் சில  வருடங்களாக உதவி இயக்குனராக இருக்கும் அருள்நிதி எப்படியாவது இயக்குனராகிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றார். அந்த நேரத்தில் நண்பர்க்கு இரண்டாவது படத்திற்கு இயக்குனர் வாய்ப்பு கிடைக்க நான் பார்ட்டி வைக்கிறேன் என்று சொல்லி வற்புறுத்தி க்ளப்பிற்கு அழைத்து செல்ல, ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும்
( மலர்விழி )
அருள் நிதியும்
( மதியழகன் ) இருவரும் ஒரு  கிளப்பில் சந்தித்து கொள்கின்றனர். அதன் பின்னர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
( மலர்விழி )  ஒரு எழுத்தாளர், என்று அறிமுகம் செய்து கெள்ள அவருக்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத்க்கு
 அருள்நிதி மேல் ஒரு ஈர்ப்பு வர, அவரை தன் வீட்டிற்கு அழைத்து செல்கின்றார்.
அடுத்தநாள் காலை அருள்நிதி ஒரு சேரில் கட்டிப்போட்டு இருக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத், தனக்குத் தானே கையை அறுத்துக்கொண்டு இறந்து கிடக்கிறாள். அருள்நிதிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அவருக்கு மட்டுமில்லை நமக்கும் தான். 
 
இவர்களுக்கு இடையே என்ன நடந்தது? ஷ்ரத்தா ஸ்ரீநாத் எப்படி இறந்தார்? அதன் பின்னர் இந்த வீட்டில் இருந்து அருள்நிதி எப்படி தப்பித்தார்? இறுதியில் என்ன நடந்தது என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் .
 
 
ஷரதா படத்தின் ஆரம்பத்தில் இறந்து போகின்றார், அதை தொடர்ந்து இடைவேளை வரை அவருக்கு பெரிய நடிக்கின்ற வாய்ப்பு இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் அவருக்கான காட்சி தொடங்கும் போது ரசிக்க வைக்கின்றார்.
 
படத்தில் எந்த ஒரு காட்சியையும் முழுமையாக விவரிக்க முடியாது, ஏனெனில் சஸ்பென்ஸ்  உடைந்துவிடும். அதிலும் அட படம் முடிந்துவிட்டது இவ்வளவு தானா? என்று இருக்க, அதை தொடர்ந்து அருள்நிதி பார்வையில் கதை தொடங்க, அட என்னடா இது என்று சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றது.
 
ஆனால், படத்தின் முதல் பாதியில் இருந்த பதட்டம், விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் தடுமாறுகின்றது. அருள்நிதியிடம் சேர்ந்து நாமும் கவுன்ஸிலிங் சென்றது போல் இருக்க, கிளைமேக்ஸ் சஸ்பென்ஸ் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது.
 
அருள்நிதியின் நடிப்பு, ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் நடிப்பு வழக்கம் போல் சிறப்பாக அமைந்துள்ளது. யோகி பாபு, ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் வெறும் ஒரே சீனில் வந்து சென்று விடுவது ஒரு சிறிய மைனஸ்.
 
படத்தின் மிகப்பெரும் பலம் இசை தான், பின்னணியில் மிரட்டியுள்ளார். 
சாம் சி.எஸ் திரில்லர் படங்களின் நாடித்துடிப்பு அறிந்து பின்னணி இசையை அருமையாக கொடுத்துள்ளார்.
 
ஒளிப்பதிவு பிரமாதம். ஒவ்வொரு காட்சியை மிக தெளிவாகவும் அழகாகவும் படமாக்கியுள்ளார்.
 
ரூபனின் எடிட்டிங் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. வழக்கம் போல இந்த படத்திலும் தன்னுடைய பணியை செய்து கொடுத்துள்ளார்.
 
ஒளிப்பதிவும் படம் முழுவதும் பெரும்பாலும் ஒரு ரூம் என்றாலும், எங்குமே நமக்கு சலிப்பு தட்டாமல் காட்சிப்படுத்தியுள்ளனர்.
 
நல்ல திரைக்கதை ஜெயிக்கும்னு சொல்லுவாங்க.. ஆனா, நல்ல திரைக்கதை கல்லா கட்டுமான்னு யாரும் சொல்லமாட்டங்க.. இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றால், இதுபோல பல நல்ல படங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கும்
 
படத்தின் முதல் பாதி செம்ம விறுவிறுப்பு.
இரண்டாம் பாதி இன்னமும் விறுவிறுப்பு இருந்திருக்கலாம். கிளைமேக்ஸ் இன்னமும் எல்லோருக்கும் புரிவது போல் காட்டியிருக்கலாம்.
 
மொத்தத்தில் K-13 அருள்நிதி சேரில் கட்டியிருப்பது போல், நம்மையும் படத்தின் சீட்டின் நுனியில் கட்டிப்போட்டுள்ளார் இயக்குனர் பரத் நீலகண்டன்