தேஜாவு திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5.

நடிகர் நடிகைகள் :-  அருள்நிதி, மதுபாலா, அச்யுத் குமார், ஸ்ம்ருதி வெங்கட், சேத்தன், ராகவ் விஜய்,காளி வெங்கட், மைம் கோபி, சூப்பர்குட் சுப்ரமணி, ஹர்வின் ராம், மரியா வின்சென்ட், செந்து மோகன்,
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அரவிந்த் சீனிவாசன்.

ஒளிப்பதிவு :- பி.ஜி.முத்தையா.

படத்தொகுப்பு :- அருள் இ சித்தார்த்.

இசை :- ஜிப்ரான்.

தயாரிப்பு :- ஒயிட் கார்பெட் பிலிம்ஸ்-பிஜி மீடியா ஒர்க்ஸ்.

ரேட்டிங் :- 3.25 / 5.

தமிழ் திரைப்படம் உலகில் புதுப்புது கதைகள் உடன் புதுமுக இயக்குனர்கள்
அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட உலகிற்கு வரும் புதுமுக இயக்குனர்களில்
ஒரு சிலர்தான் மட்டும் தான் தங்கள் முதல் திரைப்படத்திலேயே தமிழ் திரைப்பட உலகின் அழுத்தமான தடம் பதித்து விடுகிறார்கள்.

இந்த தேஜாவு திரைப்படத்தின் புதுமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன், பத்திரிகையாளராக இருந்து எந்த ஒரு இயக்குனரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் இயக்குனர் ஆகியிருக்கிறார்.

வித்தியாசமான நல்ல கதையைத் தேர்வு செய்தவர் இந்த ‘தேஜாவு’ திரைக்கதையை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இருந்தாலும் பரவாயில்லை ஏமாற்றமில்லாமல் ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.

தமிழகக் காவல் துறையின் டிஜிபி ஆக இருக்கிறார்
மதுபாலா.

மதுபாலாவின் மகள் ஸ்முருதி வெங்கட்டை யாரோ சில மர்ம நபர்கள் கடத்திவிடுகிறார்கள்.

அதைப் பற்றி தனிப்பட்ட முறையில் விசாரிக்க வேண்டும் என அவரது சக காவல்துறை அதிகாரி ஒருவரிடம் அண்டர்கவர் ஆபீசர் ஒருவர் தேவை எனக் கூறுகிறார்.

அந்த அண்டர்கவர் ஆபீசராக கதாநாயகன் அருள்நிதி வருகிறார்.

அண்டர்கவர் ஆபீசர் வரும் கதாநாயகன் அருள்நிதி இந்தக் கடத்தலை பற்றிய விசாரணையில் தீவிரமாக இறங்குகிறார்.

ஸ்முருதி வெங்கட் கடத்தப்படும் போது காவல் துறை கட்டுப்பாட்டுக்கு அறைக்கு போன் செய்யும் போது எழுத்தாளர் அச்யுத் குமார் பெயரை கூறிவிடுகிறார்.

எழுத்தாளர் அச்யுத் குமார் விசாரிக்கச் சென்ற போது நடக்கும், அவர் புதிதாக எழுதி வரும் கதையில் என்ன இருக்கிறதோ அதுதான் தற்போது ஸ்முருதி வெங்கடின் கடத்தலாக இருக்கிறது.

எழுத்தாளர் அச்யுத் குமார் எழுதும் கதை நிஜத்தில் அப்படியே நடக்கிறது.

அதைக் கண்டு கதாநாயகன் அருள்நிதி, மதுபாலா இருவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

தமிழகக் காவல் துறையின் டிஜிபி ஆக மதுபாலாவின் மகளை ஸ்முருதி வெங்கட்டை கடத்திய மர்ம கும்பலை கதாநாயகன் அருள்நிதி கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? எழுத்தாளர் அச்யுத் குமார் எப்படி நடக்கும் உண்மைகளை முன்னரே ஒரு கதையாக எழுதுகிறார் என்பதையும் கதாநாயகன் அருள் நீதி கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்த தேஜாவு திரைப்படத்தில் கதாநாயகனாக அருள்நிதி நடித்துள்ளார்.

வழக்கம் போல் திரில்லர் களத்திலும் கதாநாயகன் அருள் நீதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவருடைய நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

அலட்டல் இல்லாத நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

அண்டர் கவர் ஆபீசராக கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாகவே நடித்திருக்கிறார்.

பேச்சு, உடல்மொழி, என இரண்டிலும் கம்பீரத்தைக் காட்டியிருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் மதுபாலா, நேர்த்தியான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

கதையாசிரியராக வரும் நடிகர் அச்யுத் குமார் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் மதுபாலா மகளாக நடித்துள்ள நடிகை ஸ்ம்ருதி வெங்கட் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

கான்ஸ்டபிளாக காளி வெங்கட்
குறைவான காட்சியில் வந்தாலும் மனதில் பதிகிறார் காளி வெங்கட்.

ஜிப்ரானின் பின்னணி இசை பல காட்சிகளில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இசையில் கூடுதல் மிரட்டலைக் கொடுத்திருக்கிறார் ஜிப்ரான்.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு திரைப்படத்தின் தரத்தை நன்றாகவே உயர்த்தி இருக்கிறது.

முத்தையாவின் மொத்தத்தில் ஒளிப்பதிவு சிறப்பு.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.

அறிமுக திரைப்படத்திலேயே சிறந்த முயற்சியை கையாண்ட இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுக்கு பாராட்டுகள்.

மொத்தத்தில் ‘தேஜாவு’ திரைப்படம் மிகவும் விறுவிறுப்பு.