Saturday, September 19
Shadow

கைதி இரண்டாம் பாகத்தின் வேலைகளில் பிஸியான இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம் திரைப்படம் 2017 ஆண்டு வெளிவந்து மிக பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.

இந்த திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே நடிகர் விஜய்க்கு கதை சொன்னார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

அந்த கதை தளபதி விஜய்க்கு பிடித்துபோகவே மாஸ்டர் திரைப்படம் உருவானது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு பிரச்சினையால் திரைப்படம் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.

ஆனால் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு பிரச்சினைக்கு பிறகு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் உலக நாயகன் கமல்ஹாசனும், அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

எனவே அவர்களுக்காக காத்திருக்காமல் நடிகர் கார்த்தியை வைத்து கைதி 2 திரைப்படத்தை குறைந்த நாட்களில் எடுக்கவிருக்கிறாராம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.