கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவித்தொகை வழங்க.! நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக அரசுக்கு வேண்டுகோள்.!
கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலக நாடுகள் நடுங்குகிறது என்ற வகையில் இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்த கொரோனா வைரஸ்
தொற்று நோயினால் உலக மக்கள் அனைவரும் பயந்து நடுங்குகிறார்கள் என சொல்லலாம்.
மார்ச் 31ம் தேதி மேல் சகஜ நிலைமைக்கு திரும்பாமல் வீட்டுக்குள்ளேயே மக்களை இருக்க இந்திய அரசு வற்புறுத்தி உள்ளது
மத்திய அரசு மற்றும் மாநில அரசும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தி மக்கள் நலனை காக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து குறித்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது… தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசும் மற்றும் மாநில அரசும் எடுத்து கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் ஆகும்.
நமது அரசோடு சேர்ந்து மக்கள் ஆகிய நாமும் இணைந்து இந்த கொடிய கொரோனா வைரஸை பரவாமல் தடுக்க ஒத்துழைப்பும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் தமிழக மக்களாகிய அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.