Friday, August 14
Shadow

கொரோனா வைரஸ் கூட சாதி மதம் பார்க்காது ஆனால் அரக்கர்களை கண்டித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

உலகளவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு தாக்குதலால் எண்ணற்ற பல உயிர்களை நாம் இழந்து வருகிறோம்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர்களும் இறக்கும் செய்தியை நாம் அறிந்து வருகிறோம்.

இதனிடையே கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக இறந்த மருத்துவரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடலை தங்கள் வசிக்கும் பகுதிகளில் புதைப்பதால் அந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு தங்களுக்கு தொற்றக்கூடும் என்ற அறியாமையால் இவ்வாறு பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

இதனையறிந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த அவர்கள் இறந்தவர்களின் உடலை புதைக்க தனது ஆண்டாள் அழகர்
கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மக்களின் அறியாமையை கண்டித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

கொல்லும் கொரோனா வைரஸ் நோய் தொற்று கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ, நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல் கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்.

என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பதிவிட்டுள்ளார்.