கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து எப்படித் தப்பித்தேன் ஹாரி பட்டர் கதை ஆசிரியர் விளக்கம்.

உலகில் பல புத்தகங்கள் இருந்தாலும் நிறைய பேரால் படிக்கப்பட்ட கவரப்பட்ட புத்தகம் என்ற ஒரே பெருமை ஹாரிபாட்டர் புத்தகத்திற்கு உண்டு.

இந்தப் புத்தகம் விற்பனையில் பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்தப் புத்தகத்தை எழுதியவர் பிரபல எழுத்தாளர் ஜே கே ரவுலிங் என்பவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அதன் பின்னர் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து மீண்டும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெ.கே ரவுலிங் கூறும்போது எனக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்த அறிகுறிகள் தென்பட்டன.

அப்போது குயின்ஸ் மருத்துவமனை டாக்டர் ஒருவர் அதிலிருந்து எப்படி விளையாடலாம் என சில டிப்ஸ்களை கொடுத்திருந்தார்.

எனது கணவரின் ஆலோசனைப்படி வீட்டிலிருந்தபடியே அவற்றை மேற்கொண்டேன் இப்போது நான் பூரண குணமாகி விட்டேன்.

இந்த டிப்ஸை உங்களுக்கும் தருகிறேன் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருங்கள் எனக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த டாக்டர் குறித்த வீடியோவை இணைத்துள்ளார் ஜே.கே ரவுலிங்.

error: Content is protected !!