கோமாளி – திரை விமர்சனம்

நடிப்பு – ஜெயம் ரவி,, காஜல்அகர்வால் 
சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ,கே.எஸ்.ரவிகுமார்

தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

இயக்கம் – பிரதீப் ரங்கநாதன்

இசை – ஹிப்ஹாப் தமிழா

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா ரேகா D.one

வெளியான தேதி – 15 ஆகஸ்ட் 2019

ரேட்டிங் – 2.5/5

 

தமிழ் திரைப்பட உலகில் மெடிக்கலை மையமாக வைத்து வரும் திரைபடங்கள் மிக மிக குறைவுதான். மெடிக்கல் என்றாலும் அதை மனநலம் பாதிப்பு சம்பந்தமாக படங்களில் கதையாக அமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பதினாறு வருடங்கள் கோமாவில் இருந்தவர் எழுந்து வந்த ஒருவருக்கு நடக்கும் விஷயங்களைப் படத்தின் கதையாக எடுத்துள்ளார்கள். ஆனாலும், அதை சீரியசான கதையாக இல்லாமல் காமெடியை வைத்து படம் முழுவதும் கலகலப்பான காட்சிகளை வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்து ரசிக்க வைத்துள்ளார்கள்.

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், மக்களுக்கு எந்தக் கதையை கொடுத்தால் பிடிக்கும் என்பதை ரசிகர்களின் பல்ஸை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

குறிப்பாக தியேட்டருக்கு அதிகமாகப் படம் பார்க்க வரும் 90 சதவீத குழந்தைகளை கவர அதிகமாகவே முயற்சித்திருக்கிறார். ஆனால், இந்தப் படம் அனைத்து வயதினருக்குமான படமாகத்தான் இருக்கிறது.

கதாநாயகன் ஜெயம் ரவி படத்திற்கு படம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை தேடி நடித்து வருபவர். அந்த வகையில் இந்த முறை கோமாவில் இருந்து தன் பல வருட வாழ்க்கையை மறந்த ஒரு இளைஞனாக நடித்துள்ளார், இத்தகைய முயற்சி அவருக்கு வெற்றியை கொடுத்ததா? என்பதை பார்ப்போம்

படத்தின் கதை ஆரம்பமே 80களில் தொடங்குகின்றது, 90-ல் ஜெயம் ரவி பள்ளிக்கு செல்வது போல் காட்டுகின்றனர். கதாநாயகன் ஜெயம்ரவி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது உடன் படிக்கும் சம்யுக்தா ஹெக்டேவிடம் எப்படியாவது காதலை சொல்ல வேண்டும் என்று டிசம்பர் 31 அன்று செல்ல, அதே நாளில் பெரிய டான் ஒருவரை கொலை செய்து அந்த ஏரியாவில் தான் கிங்காக ஆகவேண்டும் என கே.எஸ்.ரவிக்குமார் திட்டம் தீட்டுகின்றார்.

கதாநாயகன் ஜெயம்ரவி காதலை சொல்ல, அதற்கிடையில் கே.எஸ். ரவிக்குமார் அந்த டானை கொன்றுவிட்டு கதாநாயகன் ஜெயம்ரவி, சம்யுக்தாவிற்கு பரிசாக கொடுத்த ஒரு சிலையை திருட்டிக்கொண்டு செல்கின்றார், அப்போது எதிர்ப்பாராத விதமாக கதாநாயகன் ஜெயம் ரவி மீது லாரி மோதி அதன் பிறகு கார் மிது மோதி அவர் விபத்தில் சிக்கி 16 வருடம் கோமாவிற்கு செல்கின்றார்
அதன் பின்னர் 16 வருடங்கள் கழித்து கண் விழிக்கிறார். அதன் பின் இந்த உலகமே அவருக்கு புதிதாக மாறிவிடுகிறது,

நெருங்கிய நண்பனாக இருந்த யோகி பாபு, கதாநாயகன் ஜெயம் ரவி தங்கையைத் திருமணம் செய்து கொண்டு மச்சானாக மாறியிருக்கிறார். அதோடு அத்தனை வருடங்களாக கதாநாயகன் ஜெயம் ரவியை அவர் வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால், யோகி பாபுவின் குடும்பம் கடனில் சிக்கித் தவிக்கிறது. ஒரு வாரத்திற்குள் கடனை அடைக்க வங்கிக்காரர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். அந்த நேரத்தில் கதாநாயகன் ஜெயம்ரவிக்கு மிகப்பெரிய பணத்தேவை ஏற்படுகிறது

குடும்பத்துக்கு சொந்தமான பல கோடிகள் மதிப்புடைய குடும்பத்து பரம்பரை சிலை பற்றி ஜெயம் ரவிக்கு தெரிய வருகிறது. அந்த சிலையை திருடி சென்றபோது சாதாரண ரவுடியாக இருந்த
கே.எஸ்‌.ரவிக்குமார்
ஆனால், இப்போது எம்எல்ஏ கேஎஸ் ரவிக்குமாராக இருக்கிறார். கதாநாயகன் ஜெயம்ரவியிடம் இருந்து திருடி சென்ற சிலை, மிக பெரிய விலைமதிப்பற்றது அதை எம் எல் ஏ கே எஸ் ரவிக்குமார் இடமிருந்து
அதைத் திருட ப்ளான் போடுகின்றார், அதன் பின் அவருடைய ப்ளான் நிறைவேறியதா? யோகி பாபுவின் குடும்பத்து கடனை அடைக்க முடிவெடுக்கிறார்கள்.
அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

16 வருடங்கள் கோமாவில் இருந்த கதாநாயகன் ஜெயம் ரவி என்றதும் அதை மையமாக வைத்தே கலகலப்பான காட்சிகளை படம் முழுவதும் வைத்திருப்பார்கள் என நினைத்தால் அதில் கொஞ்சம் ஏமாற்றம்தான். இடைவேளை வரை யோகிபாபுவின் தயவில்தான் படம் கலகலப்பாக நகர்கிறது. அதன்பின் பரம்பரை சிலை, கடன் என வேறு பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறது. 16 வருட இடைவேளி ஒரு மனிதனுக்கு எப்படி புதிதாக இருக்கிறது என்பதை ஒரு பாடலிலும், ஒரு சில காட்சிகளிலும் மட்டும் காண்பித்து விட்டு கடந்து போகிறார் இயக்குனர். பிரதீப் ரங்கநாதன்.

குடும்பத்து கதாபாத்திரங்களுக்குள் அப்படியே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஒன்றி விடுகிறார் நாயகன் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் பள்ளி மாணவனாக கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த துறுதுறுப்பை அப்படி கொண்டு வந்திருக்கிறார்.

16 வருடங்களாக கோமாவில் இருந்த வந்த பின் கம்ப்யூட்டர், மொபைல் போன், ஊர் எப்படி மாறிப் போய்விட்டது என்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார். டெக்னாலஜி மாறினாலும் நம்மிடம் எமோஷன் மட்டும் மாறவில்லை என்பதை கிளைமாக்சுக்கு முன்பாக பக்கம் பக்கமாக வசனம் பேசி கொஞ்சம் யோசிக்க வைக்கிறார்.

ஜெயம் ரவியின் பள்ளிக் காதலியாக பிளாஷ்பேக்கில் சம்யுக்தா ஹெக்டே. வேறு ஒருவருடன் திருமணம் நடந்த பின்னரும் கதாநாயகன் ஜெயம் ரவி மீது காதலுடன் தான் இருக்கிறார். இடைவேளைக்கு முன்பாகத்தான் வருகிறார் காஜல் அகர்வால். அவரும் கதாநாயகிதான் என்பதை சொல்லாமல் சொல்லி ஜெயம் ரவியுடன் ஒரு டூயட்டை வைத்திருக்கிறார்கள். இரண்டு கதாநாயகிகள் என்றாலும் இருவருக்குமே படத்தில் அதிக வேலையில்லை.

படத்தின் இரண்டாவது கதாநாயகனாக யோகி பாபு. படம் முழுவதும் ஜெயம் ரவியுடனே வருகிறார்.
இவருக்கு பக்க பலமாக படம் முழுவதுமே யோகிபாபு கொடுக்கும் கவுண்டர் சிக்ஸர் தான், அதிலும் ஒரு மொக்கை ஜோக் நான் சொன்னது என சொல்லி அவர் கைத்தட்டல் வாங்கும் காட்சியெல்லாம் சிரிப்பு சரவெடி.

எங்கெங்கெல்லாம் கேப் கிடைக்கிறதோ அங்கெல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறார். நீ என் நண்பன்டா அதுக்காகத்தான்
உனக்கு உதவி பண்ணன்டா எனச் சொல்லும் போது கண் கலங்கவும் வைக்கிறார்.

வில்லனாக கே.எஸ்.ரவிக்குமார். சாதாரண ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறி எம்எல்ஏவாக இருப்பவர். பெரிய வில்லத்தனம் எல்லாம் செய்யாமல் இரண்டொரு காட்சிகளே என்றாலும் நடிப்பில் ரவுடித்தனம் காட்டுகிறார்.

ஹிப்ஹாப் தமிழாவின் அதே நான்கு டியூன், வெவ்வேறு வார்த்தைகளில் இந்தப் படத்திலும் ஒலிக்கிறது. அந்த நான்கு டியூனில் உருவான நான்கு பாடல்களையும் அவரே பாடியிருப்பார் போலிருக்கிறது. எப்போதுதான் மாற்றிக் கொள்ளப் போகிறாரோ.

யு சர்டிபிகேட் படத்தில் ஆரம்பத்தில் டீக்கடையில் அந்தப் பெண்மணியின் இடுப்பை அப்படி காட்டுவதற்கு ஏ சர்டிபிகேட்டே கொடுத்திருக்கலாம். குழந்தைகளும் ஜெயம் ரவி படத்தைப் பார்ப்பார்கள் என்பதை இயக்குனர் புரிந்து கொண்டிருக்கலாம். அல்லது ஜெயம் ரவியாவது கவனித்து அந்தக் காட்சியை வேறு விதமாக மாற்றச் சொல்லியிருக்கலாம்.

டிரைலரில் இடம் பெற்று சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினிகாந்த் பற்றிய அரசியல் வசனத்தை மாற்றிவிட்டார்கள். ஆனாலும், அந்த ரஜினிகாந்த்தின் அரசியல் என்ட்ரி காட்சி ஏற்படுத்திய தாக்கதை மாற்றப்பட்ட காட்சி நிகழ்த்தவில்லை.

திரைக்கதையில் பெரிய திருப்பம் சுவாரஸ்யம் இல்லை.

இடைவேளைக்குப் பின் திரைக்கதை சிலை, கடன், மனிதம் தள்ளாட ஆரம்பிக்கிறது. முதல் படத்திலேயே தான் சொல்ல ஆசைப்படும் அட்வைஸ்களை அள்ளித் தெளிக்க ஆரம்பித்துவிட்டார் இயக்குனர். ஆனாலும், ஒரு இரண்டரை மணி நேரம் போனது தெரியவில்லை.

கோமாளி ஏமாற்றவில்லை….
மொத்தத்தில் கோமாளி டைட்டிலுக்கு ஏற்றது போல் கண்டிப்பாக சிரிக்க வைப்பார், கொஞ்சம் கருத்தையும் கூறி கிளைமேக்ஸில் கலங்க வைப்பார்.