கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ஜெயலலிதா படத்தில் அஜித் மகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முன்வந்தனர்.

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான பிரியதர்ஷினி தி ஐயர்ன் லேடி என்ற படத்தை அறிவித்து அதில் ஜெயலலிதாவாக நித்யாமேனன் நடிக்கிறார் என அறிவித்தார்.

இதனையடுத்து இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‘தலைவி’ என்கிற பெயரில் எடுக்கவுள்ளதாக அறிவித்தார்.

இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளதால் அவர் அதற்கான பயிற்சிகளை எடுத்து வருகிறார்.

இவர்களை அடுத்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸ் ஆக எடுத்து இருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன்.

இபபடத்துக்கு குயின் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா கேரக்டர் இதில் இடம் பெறவில்லையாம்.

இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

ஜெயலலிதாவின் கணவராக அதாவது சோபன்பாபு கேரக்டரில் ‘இவன் வேற மாதிரி’ படத்தில் வில்லனாக நடித்த வம்சி கிருஷ்ணா நடித்துள்ளார்.

சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடித்துள்ளார்.