“நவரசா” ஆந்தாலஜி படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா உடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் – கார்த்திக் சுப்புராஜ் !
“நவரசா” ஆந்தாலஜி படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா உடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் – கார்த்திக் சுப்புராஜ் !
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விரைவில் வெளிவரவுள்ள “நவரசா” ஆந்தாலஜி படத்தில் அமைதி உணர்வை மையமாக வைத்து, ஒரு பகுதியை இயக்கியுள்ளார்.
கவுதம் வாசுதேவ் மேனனுடன் பணியாற்றியது குறித்து, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது…
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களை என் கல்லூரி நாட்களில் இருந்தே எனக்கு தெரியும். ஒரு திரைப்பட இயக்குநராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா கதாப்பாத்திரங்கள் குறித்து கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது..
கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா கதாப்பாத்திரங்கள் படத்தில் மிகச்சிறந்த நண்பர்கள். திரையில் அவர்களது நட்பு மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.
“நவரசா” மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படம். Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். “நவரசா” Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக 190 நாடுகளில் வெளியாகிறது.
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும்.











