Sunday, June 20
Shadow

சக்ரா திரை விமர்சனம் ரேட்டிங் – 3.5 /5

நடிகர் நடிகைகள் – விஷால், ஷ்ரத்தா கபூர், ரெஜினா காசென்ட்ரா, ரோபோ சங்கர், கே.ஆர்.விஜயா,மனோபாலா, ஷ்ருஷ்டி டாங்கே
மற்றும் பலர்

தயாரிப்பு – விஷால் பிலிம் பாக்டரி

இயக்கம் – எம்.எஸ். ஆனந்தன்.

ஒளிப்பதிவு – பாலசுப்பிரமணியம்

படத்தொகுப்பு – தியாகு

இசை – யுவன் ஷங்கர் ராஜா,

மக்கள் தொடர்பு – ஜான்சன்.

திரைப்படம் வெளியான தேதி – 19 பிப்ரவரி 2021

ரேட்டிங் – 3.5 /5

ஒரு திரைப்படத்தில் ஒரு காவல் துறை பற்றிய
ராணுவம் பற்றிய
கதையைப் பார்க்கலாம்,

ஆனால், இந்த சக்ரா திரைப்படத்தில் இரண்டையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் ஆனந்தன் படத்தின் கதையை யோசிக்க பெரிதாக குழப்பிக் கொள்ளவில்லை.

நடிகர் விஷால் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த இரும்புத் திரை படத்தைப் பார்த்தபின் கூட அவருக்கு இந்த கதைக்கரு உதித்திருக்கலாம்.

சில வசனங்களைப் பேசினாலே ரசிகர்கள் கைத்தட்டி விடுவார்கள் என நினைத்திருக்கிறார்.

சுதந்திர தினத்தன்று சென்னையில் ஒரே நாளில் முதியவர்கள் வசிக்கும் 50 வீடுகளில் திருட்டு நடக்கிறது.

அந்த வழக்கை பற்றி அசிஸ்டென்ட் கமிஷனரான கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் விசாரிக்கிறார்.

50வது கொள்ளை நடந்த வீடு மிலிட்டரியில் இருக்கும் கதாநாயகன் விஷால் வீடு. கொள்ளையர்கள் அவரது அப்பாவின் மிக பெரிய சக்ரா விருதையும் சேர்த்து கொள்ளையடித்துச் சென்று விடுகிறார்க்ள்.

கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகன் விஷாலும் காதலர்கள் தனது அப்பாவின் விருதை மீட்க, காதலி கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்விற்கு உதவியாக வழக்கு விசாரணையில் உடன் இறங்குகிறார்

கதாநாயகன் விஷால். இருவரும் கொள்ளையர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

எந்த ஒரு ஆக்ஷன் கதையாக இருந்தாலும் அது கதாநாயகன் விஷாலுக்குப் பொருத்தமாகவே இருக்கும். இந்தப் படத்தின் மிலிட்டரி ஆபீசர் கதாபாத்திரமும் அவருக்குப் பொருத்தமாகத்தான் உள்ளது.

சைபர் கிரைம் மூலம் கொள்ளை அடிப்பவர்களை டெக்னிக்கலாக வளைத்துப் பிடிப்பதை விட அதிகம் பேசிப்பேசியே பிடிப்பது போல் இருக்கிறது.

அவர்களைப் பிடிக்க உதவியாகவும், வசதியாகவும் திரைக்கதையில் தேவைப்படும் இடங்களில் அவர்களே நெளிவு சுளிவுகளை வைத்துக் கொண்டுள்ளார்கள்.

அசிஸ்டென்ட் கமிஷனராக கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத். போலீஸ் உடையில் ஓரிரு காட்சிகளில்தான் வந்து செல்கிறார்,

மற்றபடி மப்டியில்தான் அதிகமாக இருக்கிறார்.

அவர் செய்ய வேண்டிய வேலைகளை கதாநாயகன் விஷாலே வான்டட் ஆக செய்ய, இவர் அவர் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

உயர் அதிகாரிகளிடம் கூட மரியாதை இல்லாமல் பேசும் ரோபோ சங்கர் கதாபாத்திரம் சீரியஸ் காட்சிகளில் அதன் இயல்புத் தன்மையைக் கெடுத்துவிடுகிறது.

Read Also  சுட்டுப் பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்

ஒரு ஸ்டேஷனில் எஸ்ஐ, இன்ஸ்பெக்டரிடம் கூட அவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் காவலர்கள் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள்.

ஆனால், கமிஷனர் எதிரிலேயே அவரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுகிறார். இதையெல்லாம் காமெடி என்ற லிஸ்ட்டில் எப்படி வைப்பார்களோ அவர்களுக்கே வெளிச்சம்.

படத்தின் வில்லன், சாரி, வில்லி ரெஜினா. இடைவேளைக்குப் பிறகுதான் என்ட்ரி கொடுக்கிறார்.

அவர் ஏன் இப்படி ஆனார் என்பதற்கு சினிமா வழக்கப்படி ஒரு பிளாஷ்பேக் உண்டு. கஷ்டப்பட்டு வில்லித்தனத்தைக் காட்ட முயற்சித்திருக்கிறார் ரெஜினா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேஆர் விஜயா. விஷாலின் பாட்டியாக வருகிறார்.

மனோபாலா இன்னும் எத்தனை படத்தில்தான் இப்படி பேச வைப்பார்களோ தெரியவில்லை.

சிருஷ்டி டாங்கே ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார்.

நல்ல வேளை படத்தில் ஒரே ஒரு பாடல்தான். இன்னும் பாடல்கள் இருந்திருந்தால் அது படத்திற்கு ஸ்பீட் பிரேக்கராக இருந்திருக்கும். பாடல்கள் வேண்டாமென்று யோசித்தவருக்கு நல்ல திரைக்கதை ஞானம் உள்ளது. அதை படத்திலும் காட்டியிருக்கலாம்.

யுவன் ஷங்கர ராஜா இசை, அவருக்கு வேலை கொடுக்க படத்தில் காட்சிகள் இல்லை. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு என டைட்டிலில் வருகிறது.

திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே கொள்ளை காட்சிகளை அவ்வளவு நேரம் காட்டி படத்தின் விறுவிறுப்பைக் குறைத்துவிட்டார் இயக்குனர்.

அங்கு தள்ளாடும் திரைக்கதை கடைசி வரை தள்ளாடிக் கொண்டேதான் இருக்கிறது.

பல காட்சிகளில் நாடகத்தனமாக வந்து பேசிவிட்டுச் செல்கிறார்கள்.

80களுக்கு பயணித்தது போல இருக்கிறது. அதிலும் கிளைமாக்சில் டாக்டரிடம் ரெஜினா ஒரு வசனம் பேசிவிட்டுச் செல்கிறார் பாருங்கள், அடேங்கப்பா… மற்ற தென்னிந்திய மொழிகளில் சமீப காலத்தில் இப்படியான த்ரில்லர் படங்கள் எப்படியெல்லாம் எடுக்கப்பட்டுள்ள என்பதை இயக்குனர் பார்த்திருக்க மாட்டாரோ?.

டிஜிட்டல் இந்தியாவில் நம் தனிப்பட்ட தகவல்களை பலருக்கும் தெரிவித்தால் நாம் எப்படியெல்லாம் சிக்குவோம் என்பதைச் சொல்ல முயற்சித்ததற்காக மட்டும் இயக்குனரைப் பாராட்டலாம்.

சக்ரா – ஓகேதான்.

CLOSE
CLOSE