பல தடைகளை கடந்து சக்ரா’ திரைப்படம் நாளை திட்டமிட்டபடி அனைத்து மொழிகளிலும் வெளியாகும்.
சென்னை 18 பிப்ரவரி 2021
நடிகர் விஷால் நடிப்பில் புதுமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் இயக்கியிருக்கும் ‘சக்ரா’ திரைப்படத்தை விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார்.
இதில் சக்ரா திரைப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்க ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.எ
நாளை ( 2021 பிப்ரவரி 19 ) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற வழக்கின் காரணமாக திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், வழக்கின் மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்ற போது, திரைப்படத்தின் மீது இருந்த தடை முற்றிலும் விலகியது.
இதன் மூலம் ‘சக்ரா’ திரைப்படம் ஏற்கனவே அறிவித்ததை போலவே நாளை ( 2021 பிப்ரவரி 19 ) தமிழ்நாடு மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் சக்ரா திரைப்படம் வெளியாகிறது.
’நடிகர் விஷால் நடிப்பில் சக்ரா’ திரைப்படம் மீதான தடை முற்றிலும் நீங்கி திட்டமிட்டபடி நாளை 2021 பிப்ரவரி 19 தேதி வெளியாகும்.
சக்ரா திரைப்படம் வெளியாகும்
என்ற அறிவிப்பு வெளியானதை விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.











