சத்தியமா_விடவே_கூடாது காவல் துறையை கண்டித்து சூப்பர் ஸ்டார் ட்வீட்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவரும் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த குடும்பத்தினரிடம் சில தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போனில் பேசி ஆறுதல் கூறினார்.
தற்போது போலீசார் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவரது ட்விட்டரில் பதிவில்…
தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்த கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது.
#சத்தியமா_விடவே_கூடாது. என பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
#சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020