சந்தானத்தின் நடிப்பில் ‘ஏ1’; படத்திற்கு எத்தனை கோடி தெரியுமா..??

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் பத்து நாட்களுக்கு முன் வெளியான படம் தான் ‘ஏ1’.

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ராஜ் நாராயணன் இப்படத்தை தயாரித்திருந்தார்.

காமெடி சரவெடியில் உருவான இப்படம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்தது.

வழக்கமான சந்தானத்தின் டைமிங் காமெடி இப்படத்திற்கு பெரும் பலமாக இருந்தது.

இதுவரை, தமிழகத்தில் மட்டும் ரூ.12 கோடி வரை வசூலாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவ்வருடத்தின் ஆரம்பத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு 2’ படமும் சந்தானத்திற்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்தது.

2019ல் வெளிவந்த இரண்டு படங்களும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறாராம் சந்தானம்..