சிகரெட் பிடிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி… எங்கே சென்றது பிரபல அரசியல் கட்சி…??

சிகரெட் பிடிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி… எங்கே சென்றது பிரபல அரசியல் கட்சி…??

தமிழ் திரைப்பட உலகில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவையும் கலக்கி வருகிறார் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி.

சிரஞ்சீவி நடிப்பில் வெளி வந்த சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் ஆரம்பித்து சில தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

இந்நிலையில், தெலுங்கில் ‘உப்பன்னா’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இதில் விஜய் சேதுபதியின் போஸ்டரை நேற்று வெளியிட்டது அப்படக்குழு.

இரண்டு போஸ்டரை வெளியிட்ட அப்படக்குழு,அதில் ஒரு போஸ்டரில் விஜய் சேதுபதி சிகரெட்டை வைத்து புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார், சந்தானம் நடிப்பில் வெளிவந்த டகால்டி என பல படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்ற சிகரெட் காட்சிக்கு பிரபல அரசியல் கட்சி கடும் எதிர்ப்பை காட்டியது.

நடிகர் விஜய் சேதுபதியின் இந்த ‘உப்பன்னா’ பட போஸ்டருக்கு பிரபல அரசியல் கட்சி இதுவரை எந்தவொரு எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருப்பதிலும் அரசியல் உள்ளனவோ..??