‘மெரி கிறிஸ்மஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபல தினசரி பத்திரிகையை சேர்ந்த பத்திரிக்கையாளரை வைத்து செய்த மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி !!

மெரி கிறிஸ்மஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபல தினசரி பத்திரிகையை சேர்ந்த பத்திரிக்கையாளரை வைத்து செய்த மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி !!

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’.

இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இந்த மேரி கிறிஸ்மஸ் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார்.

தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த ‘மெரி கிறிஸ்மஸ்’ திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய திரைப்பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த ‘மெரி கிறிஸ்மஸ்’ திரைப்படம் வரும் 2024 ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.

இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், திரைப்பட தொகுப்பாளர் பூஜா லதா ஸ்ருதி, நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் சண்முகராஜன், நடிகர் கவின் பாபு, பாடலாசிரியர் யுகபாரதி, பின்னணி குரல் கலைஞர் தீபா வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்த ‘மெரி கிறிஸ்மஸ்’ திரைப்படம் சம்பந்தமாக பத்திரிகையாளர்கள் பலர் பல்வேறு கேள்விகளை கேட்க, ஆரம்பித்தனர்.

பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு படக்குழுவினர் பதிலளித்துக் கொண்டிருந்த நிலையில், பிரபல தினசரி பத்திரிக்கையை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் உலகறிந்தவர் போல் தமிழகத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்தி படிக்க கூடாது என கூறிவரும் நிலையில், நீங்கள் இந்த இந்தி திரைப்படத்தில் நடிக்கிறீர்களே என கேள்வி அந்த பிரபல தினசரி பத்திரிகையை சேர்ந்த பத்திரிகையாளர் கேள்வி கேட்க, சற்றும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் இந்தி படிக்க வேண்டாம் என யாரும் கூறவில்லை.

இந்தியை திணிக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறார்கள்.

இதே கேள்வியை நடிகர் அமீர்கான் இங்கு வந்த போதும் இந்த கேள்வியை நீங்கள் கேட்டீர்களா இது சம்பந்தமாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கமாக பதிலளித்துள்ளார்.

அதை முதலில் பாருங்கள் என கான்ரோசியான கேள்விகளை  கேட்கும் பத்திரிகையாளருக்கு மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி சரியான பதிலை கூறி அந்த பிரபல தினசரி பத்திரிகையின் பத்திரிகையாளரின் முகத்தில் கரியை பூசி வைத்து செய்து விட்டார்.

அப்போது அரங்கத்தில் இருந்த மற்ற அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் இனையத்தள நண்பர்கள் கரகோஷம் எழுப்பி நடிகர் விஜய்சேதுபதியின் கருத்துக்கு மிகப்பெரிய அளவில் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!