சிவகுமாரின் சபதம் திரை விமர்சனம். ரேட்டிங் –1.75 /5

நடிகர் நடிகைகள் – ஹிப் ஹாப் தமிழா, விஜய் கார்த்திக், மாதுரி, இளங்கோ குமணன், ஆதித்யா கதிர், prankster ராகுல், பர்வதி, ச்க்தி, மனோஜ், ரஞ்சனா, ராகுல், அண்ணாமலை, கோபால், மற்றும் பலர்.

தயாரிப்பு – சத்யஜோதி பிலிம்ஸ். இந்தி ரிபல்ஸ் புரொடக்சன்ஸ்.

இயக்கம் –  ஹிப் ஹாப் தமிழா.

ஒளிப்பதிவு – அர்ஜுன் ராஜா.

படத்தொகுப்பு – தீபக் துவாரகநாத்.

இசை – ஹிப் ஹாப் தமிழா

திரைப்படம் வெளியான தேதி – 30 செப்டம்பர் 2021

ரேட்டிங் –1.75 /5

இசையமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் ஒரு இயக்குநராகவும் தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

மீசையமுறுக்கு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹிப் ஹாப் தமிழா ஆதி.

இவர் மீண்டும் சிவகுமாரின் சபதம் திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இளம் ரசிகர்கள் மத்தியில். ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு அதிகளவில் எதிர்பார்ப்பில் இருந்த சிவகுமாரின் சபதம் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி. கதாநாயகனாக நடித்து கடந்த வருடம் வெளியான திரைபபடம் ‘நான் சிரித்தால்’. அது மிகவும் படு தோல்வியை தழுவியதால் சபதம் எடுத்து இந்த சிவகுமாரின் சபதம் இயக்கியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் வசித்து வரும் வரதராஜன் என்பவர் பட்டு நெசவு தொழிலை தனது பரம்பரை பரம்பரையாக ராஜா காலத்திலிருந்து இந்த பட்டு நெசவு தொழிலை தொடர்ந்து செய்து வருகிறார்.

தனது தாத்தா வரதராஜன் போலவே நெசவு செய்யவில்லை என்றாலும், பட்டுப்புடவையை விற்கும் தொழிலில் ஈடுபாட்டுடன் இருக்கிறார் கதாநாயகன் சிவகுமார் { ஹிப் ஹாப் ஆதி }.

இவருடன் நெசவு தொழிலை பார்த்து வந்த ஊர் மக்களிடம் சந்திரசேகர் சூழ்ச்சி செய்து சென்னையில் பெரிய துணிக்கடை ஆரம்பித்து விடுகிறார்.

வரதராஜனின் மகன் முருகன், சந்திரசேகர் பெண்ணை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாகிறார்.

ஒரு பிரச்சனையில் முருகனை, சந்திரசேகர் வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.

இவருடன் இருக்கும் வரதராஜனின் பேரன் சிவகுமார், சந்திரசேகருக்கு சபதம் போடுகிறார்.

இறுதியில் சிவகுமார் போட்ட சபதம் என்ன? அதை சிவகுமார் நிறைவேற்றினாரா? இல்லையா.? என்பதுதான் சிவகுமார் சபதம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த சுகுமாரியின் சபதம் திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகுமார் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின்
வழக்கமாக குறும்பு தனம் செய்து ஜாலியாக இருக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதியை இந்த திரைப்படத்திலும் பார்க்க முடிகிறது.

இந்த சிவகுமாரின் சபதம் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரிப்பு என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுள்ளார்.

இந்த திரைப்படத்தில் உள்ள
அத்தனை பொறுப்புகளையும் ஏற்று இருப்பதால் சரியாக எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருந்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

காஞ்சிபுரம் சென்றால் காலாட்டிக் கொண்டு சாப்பிடலாம் என பழமொழி உள்ளது.

காஞ்சிபுரம் பட்டின் பெருமை தறி செய்யும் தொழிலாளர்கள் என்று நல்ல கதையை எடுத்துக் கொண்ட ஹிப்ஹாப் தமிழா ஆதி,

காஞ்சிபுரத்தில் உள்ள நெசவுத் தொழிலை பற்றி மிக ஆழமாக சொல்லாதது திரைப்படம் பார்க்கும் நமக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது..

திரைப்படத்தின் இடைவேளை வரை திரைக்கதை எங்கெங்கோ செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது.

திரைப்படத்தின் இடைவேளைக்குப் பிறகு தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் ஏமாற்றம் தான் மிச்சம்.

நிறைய தத்துவங்கள் பேசுவதை குறைத்து இருக்கலாம்.

முதல் பாதியில் அடுத்தடுத்து நான்கு பாடல்கள் வருகிறது.

அவை அனைத்தும் பெரிதாக மனதை கவரவில்லை.

திரைப்படத்தில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை கொஞ்சம் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

ஆனால், காமெடி காட்சிகளும் அதிகமாக கைகொடுக்கவில்லை.

ஒரு காட்சி மிகவும் சீரியசான இருக்கும் என்று நினைத்தால் அது காமெடியாக காட்சியாக இருக்கிறது.

காமெடியான காட்சிகள் சீரியசாக இருக்கிறது.

திரைப்படம் பார்க்கும் போது அதிக குழப்பமாக இருக்கிறது.

நடனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் கவர்ந்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

கதாநாயகியாக வரும் மாதுரி கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்து இருக்கிறார். செய்து

தாத்தா கதாபாத்திரத்தில் வரும் இளங்கோ குமணன். ரசிக்கும்படி செய்திருக்கிறார்.

ஆனால் இவர் கம்பீர தாத்தாவா? காமெடி தாத்தாவா? சீரியஸான தாத்தாவா என கன்ப்யூஸ் செய்கிறார்.

முருகன் சித்தப்பாவாக வரும் பிராங்ஸ்டர் ராகுல், ஒரு சில இடங்களில் சிரிக்கவும் பல இடங்களில் கடுப்பேற்றவும் செய்திருக்கிறார்.

ரசிகர்களை ஒரேடியாக சோதித்து விட்டார் பிரான்க்ஸ்டர் ராகுல். ஓவர் ஆக்ட்டிங்கில் ஓவர் பில்டப்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நண்பராக வரும் கதிர் ரசிக்கும் படியான காமெடியில் நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பல இடங்களில் காட்சிகள் தெளிவாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘சிவகுமாரின் சபதமா இல்லை ? சாபமா.

error: Content is protected !!