கருப்பங்காட்டு வலசு திரை விமர்சனம். ரேட்டிங் – 3 / 5

நடிப்பு – நிலீமா இசை, ஜார்ஜ்  விஜய் நெல்சன், ஆரியா, எபிநேசர் தேவராஜ், ஜிதேஷ் டோணி, சந்தியன் பாலகுரு, கௌரிசங்கர், மாரி செல்லதுரை,    

தயாரிப்பு – Crew 21 எண்டர்டெயின்மெண்ட்

இயக்கம் – செல்வேந்திரன்

ஒளிப்பதிவு – ஷரவன் சரவணன்

எடிட்டிங் – தமிழ் குமரன்

இசை – ஆதித்யா – சூர்யா

மக்கள் தொடர்பு – சதீஸ் ( TEAM AIM )

வெளியான தேதி – 11 டிசம்பர் 2020

ரேட்டிங் – 3 / 5

கொரோனா ஊரடங்கு காரணமாக, பல மாதங்களாக தமிழகமெங்கும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது திறக்கப்பட்டு திரைப்படங்கள் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், ரசிகர்கள் மீது பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் திரைப்படம்தான் கருப்பங்காட்டு வலசு.

கருப்பங்காட்டு வலசு என்ற கிராமம் கால காலமாக பின்தங்கி வளர்ச்சியடையாமல் இருக்கிறது.

மிகவும் பின்தங்கிய அந்த கிராமத்தில் அடிப்படைப்பிரச்சனைகள் ஏராளமாய் இருக்கின்றன.

சுமார் அந்த கிராமத்தில் 200, 300 பேர் கொண்ட இந்த கிராமத்தை ஸ்மார்ட் வில்லேஜாக மாற்ற முயற்சி செய்கிறார் ஊர் தலைவரின் மகள் நீலிமா ராணி.

அந்த கிராமத்தில் சிசிடிவி கேமரா மற்றும் கழிப்பறை வசதி மாணவர்களுக்கு கணினி என ஏகத்துக்கு ஆகிய வசதிகளை செய்து தருகிறோர்.

இவர் செய்யும் அத்தனை முயற்சிக்கு ஊர் மக்கள் சிலரின் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்கள்.

இந்த நிலையில் கிராமத்தில் உள்ள மக்களின் மொத்த ஆதரவு கிடைத்தவுடன் திருவிழா நடத்துகிறார்கள்.

இந்த நிலையில் திருவிழா முடிந்த அன்று இரவு நான்கு பேர் மர்மான முறையில் கொலை நடக்கிறது.

அந்த நான்கு பேர் எப்படி இறந்தார்கள்? இதற்கு யார் காரணம்? கொலை செய்த கொலைகாரன் யார்?
கொலைகாரனை காவல்துறை கைது செய்ததா ? இல்லையா‌ என்பதுதான் இந்த கருப்பங்காட்டு வலசு
திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த திரைப்படத்தில் ஊர் தலைவரின் மகளாக வரும் நீலிமா ராணி விவகாரத்து பெற்றதால் தன்னுடைய மனநிலையை சரி செய்ய கிராமத்தை ஸ்மார்ட் வில்லேஜாக மாற்ற முயற்சி செய்யும் கதாபாத்திரம் அளவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நீலிமா ராணி.

திரைப்படம் ஆரம்பத்தில், சமூக சேவையை போதிக்கும் படமோ என்று நினைக்க வைக்கிறது. போகப்போக க்ரைம் சப்ஜெக்டுக்கு மாறுகிறது.

இந்த நிலையில் திடீரென ஒரே நாளில், ஊர்மக்களில் நான்கு பேர் மர்மமாக முறையில் மரணமடைகிறார்கள்.

அந்த மர்ம அவர்களது மரணத்துக்குக்
பற்றி காவல்துறை விசாரித்து வருகிறார்.

கருப்பங்காட்டு வலசு என்ற கிராமத்தில் கூத்துகட்டும் கலைஞராக எபினேஷர் தேவராஜ் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவருடன் வரும் அரியா கொடுத்த வேலையை மிகவும் கச்சிதமாக செய்திருக்கிறார்.

மாரி செல்லதுறையின் அனுபவ நடிப்பையும் ஜார்ஜ் விஜய் நெல்சன் அலட்டல் இல்லாத காவல்துறை அதிகாரியாக நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

கிராமத்தில் நடக்கும் கொலை அந்த கொலைக்கான காரணம், ஆணவ கொலை என பல விஷயங்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர் செல்வேந்திரன்.

ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது வருத்தம். பிற்பாதியில் வரும் நீண்ட காட்சிகள் திரைப்படத்தின் வேகத்திற்கு தடையாக அமைந்துள்ளது.

கிராமத்து கதையை திரில்லர் பாணியில் கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்.

கிராமத்தில் நடக்கும் க்ரைம் சம்பங்களின் பின்னணியில் திரைப்படம் வந்து நீண்ட நாட்களாகி விட்டது.

இந்தக் குறையைப் போக்க வந்திருக்கும் திரைப்படம்தான் கருப்பங்காட்டு வலசு.

இரட்டை இசையமைப்பாளர் ஆதித்யா-சூர்யாவின் இசை பல இடங்களில் ரசிப்பும் சில இடங்களில் இரைச்சலுமாக உள்ளது.

ஒளிப்பதிவு ஷ்ரவன் சரவணனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

இயக்குநர் செல்வேந்தரன்  சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

மொத்தத்தில் ‘கருப்பங்காட்டு வலசு’ திரைப்படம் நடிகர்கள்தான் புதுசு ஆனால் திரைப்படமோ தினுசு