சூட்டிங் முடியும் முன்பே வியாபாரத்தில் கலக்கும் ‘காக்கி

திமிரு பிடிச்சவன் மற்றும் கொலைக்காரன் படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் படம் காக்கி.

ஏ. செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்ய அவ்கத் இசையமைத்துள்ளார்.

ஜீன் மாதம் இதன் முதற்கட்ட சூட்டிங் தொடங்கியது.

அக்டோபர் மாதத்திற்குள் படத்தின் ஒட்டு மொத்த சூட்டிங்கும் நிறைவு பெறும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் குழு எடிட் செய்த பதிப்பினைப் பார்வையிட்டு இப்பட உரிமைகளை வாங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு 2020 ஜனவரியில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

CLOSE
CLOSE
error: Content is protected !!