Thursday, July 29
Shadow

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து டிஸ்கவரி சேனலில் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரியாலிட்டி ஆவண நிகழ்ச்சியான டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிப்பரப்பான ‘இன்டூ தி வைல்டு வித் பியர் கிரில்ஸில்’ நடித்ததன் மூலம் தொலைக்காட்சியில் முதல் முறையாக அறிமுகமானார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற இந்தியாவின் முதல் திரைப்பட பிரபலம் என்ற பெருமையையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றார். இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது.

தற்போது அதே டிவி நடத்தும் மற்றொரு நிகழ்ச்சியில் ஒரு வர்ணனையாளராக பங்கேற்றுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

இப்போது, நடிகர் பிரகாஷ் ராஜ் ‘வைல்ட் கர்நாடகா’ என்ற புதிய டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும்  நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்து டிஸ்கவரியில் அறிமுகமாகியுள்ளார்.

மேலும் இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.

ஜூன் 5 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கர்நாடக காடுகளின் தாவரங்களையும் விலங்கினங்களையும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் விளம்பர வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் பிரகாஷ் ராஜ் இது குறித்து அவர் கூறியதாவது..

தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு “ஒரு அர்த்தமுள்ள பயணம்.. ஒரு இயற்கையின் குரலாக குரலாக மாறப்போகிறேன். ‘வைல்டு கர்நாடகா’, ​​மிகுந்த வலியுடன் செய்யப்பட்டது,

இந்தியாவின் வனவிலங்குகளை இதற்கு முன் செய்யாத வகையில் காட்சிப்படுத்துகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விவரித்ததில் பெருமை கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு மிகுவும் சிரமப்பட்டு உருவாக்கப்பட்ட இந்திய வன வாழ்க்கையின் ஆவணப்படம். தமிழ் & தெலுங்கில் தொகுத்து வழங்கியதை பெருமையாக உணர்கிறேன்”

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.