முதல் முதலாக மலையாள ரீமேக் திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் நடிகர் ஆர்யா இணைந்து நடிக்க உள்ளனர்.

கொரானா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள இந்த சமயத்திலும் மிக பிஸியாக உள்ள நடிகர் என்றால் அது நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் என்று சொல்லலாம்

இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் நேரத்தை வீணாக்காமல் மிகவும் பயனுள்ளதாக  மாற்றிக் கொண்டுள்ளார்.

ஆம் சமீபத்தில் இயக்குனர் பாக்கியராஜுடன் சந்திப்பின் மூலம் முந்தானை முடிச்சு இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வந்தது.

அடுத்த புதுபட செய்தியும் தற்போது கசிந்துள்ளது.

ஆம் முதல் முறையாக நடிகர் ஆர்யாவுடன் மலையாள ரீமேக் திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் .

இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ள திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்து மிக வெற்றி பெற்ற திரைப்படம் அய்யப்பனும் ஜோஷியும்’. பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் கதாநாயகர்களாக நடித்த இந்த திரைப்படம் இப்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட உள்ளது.

இந்த திரைப்படத்தின் கதை இது தான் கோஷி குரியன் (பிருத்விராஜ் ), ஒரு செல்வாக்கு மிக்க முன்னாள் ராணுவ வீரர். அய்யப்பன் நாயர் (பிஜு மேனன் ) சாதாரண போலீஸ் சப் இன்ஸ்பெக்டர். இவர்கள் இடையேயான மோதல், ஈகோ, இருவரது வாழ்க்கையையும் என்னவாக்குகிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.

தமிழ் ரீமேக்கில் பிஜு மேனன் கேரக்டரில் சசிகுமார் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. பிருத்விராஜ் கேரக்டரில் நடிக்க ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும். என தெரிகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!