சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ செகன்ட் லுக் வெளியானது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் படம் ‛தர்பார்’.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
லைகா இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதன் சூட்டிங் தற்போது ஜெய்ப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று ஓணம் பண்டிகையான (செப்.,11) மாலை 6 மணிக்கு தர்பார் பட 2வது போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அதன்படி தற்போது வெளியாகியுள்ளது.

இதில் ரஜினிகாந்த் வெறும் பனியன் மட்டுமே அணிந்திருக்கிறார். உடற்பயிற்சி செய்துக் கொண்டே ஆக்ரோஷமாக இருக்கிறார். தன் வலது கையில் காப்பு அணிந்திருக்கிறார்.