Monday, January 18
Shadow

சூரரைப் போற்று திரை விமர்சனம். ரேட்டிங் – 3.5 /5

நடிப்பு – சூர்யா, மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், பூ ராமு,காளி வெங்கட், மற்றும் பலர்

தயாரிப்பு – 2D என்டர்டைன்மென்ட்

இயக்கம் – சுதா கொங்கரா

ஒளிப்பதிவு – நிகேத் பொம்மி

எடிட்டிங் – சதீஷ் சூர்யா

இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்

மக்கள் தொடர்பு – ஜான்சன்

திரைப்படம் வெளியான தேதி – 12 நவம்பர் 2020
(அமேசான் ப்ரைம் விடியோ)

ரேட்டிங் – 3.5 /5

 

பல்வேறு விதமான எதிர்ப்புகள் எதிர்பார்ப்புகளைக் கடந்து ஒரு வழியாக ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.

OTT தளங்களில் இதுவரையில் வெளியான நேரடி புது திரைப்படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவேயில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

அந்தக் குறையை இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம்  போக்கியிருக்கிறது.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக அதிக செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

இன்னும் பல ஊர்களில் சரியான மின்சார வசதி கூட கிடைக்காத கிராமத்து மக்களுக்குப் பேருந்து வசதிகளே தற்போதைய காலகட்டத்தில் பெரிய விஷயமாக இருக்கும் போது, விமானத்தில் கூட செல்லலாம் என்பதை உணர்வுப்பூர்வமாக வழங்கியிருக்கிறார். இயக்குநர் சுதா கொங்கரா.

குறைந்த கட்டண விமான சேவையை அனைவருக்கும் வழங்குவதற்கான ஓர் உறுதியான மனிதனின் வழக்கமான கதைதான் என்றாலும் தனி நபராக அவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல கார்ப்பரேட் கம்பெனிகள் சூழ்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

ஏர் டெக்கான் நிறுவனத்தைத் துவங்கிய கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் தான் நினைத்ததைத் திட்டமிட்டு உடனடியாக முடித்தேயாகவேண்டுமென்ற தீவிரம் கொண்டவர்.

சைனிக் பள்ளியில் சேர்ந்து, தேசிய ராணுவ அகாடெமியில் படித்து போரில் பங்கேற்று, விவசாயம் செய்து, தேர்தலில் போட்டியிட்டு, ஹெலிகாப்டர் வாடகைக்கு விடும் நிறுவனத்தைத் துவங்கி பிறகு குறைந்த கட்டண விமான நிறுவனத்தைத்  துவங்கியவர்.

கேப்டன் கோபிநாத்தின் இவ்வளவு நீண்ட சாகசத்தில் ஒரு குறிப்பிட்ட அத்தியாத்தை மட்டும் எடுத்து திரைக்கதையாக்கியிருக்கின்றனர் இயக்குநர் சுதா கொங்கரா.

இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு இதனால் திரைப்படத்தின் இலக்கு தெளிவாகி விடுவதால்.

அந்த இலக்கை நோக்கி கதாநாயகன் சூர்யாவோட சேர்ந்து நாமும் பரபரப்பாக பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது.

கதாநாயகன் சூர்யா நெடுமாறன் குறைந்த விலையில் எல்லோரும் பயணம் செய்யும் வகையில் ஒரு விமான நிறுவனத்தைத் துவங்க வேண்டுமென அவருடைய ஆசை ஆனால் அந்தக் கனவு எளிதில் கைகூடுவதாயில்லை. ஏற்கனவே அந்தத் தொழிலில் இருப்பவர்களும் அதிகாரவர்க்கமும் சேர்ந்துகொண்டு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

Read Also  களவாணி 2 - திரை விமர்சனம்

நெடுமாறனின் சூர்யா திட்டங்களைச் சீர்குலைக்கிறார்கள்.

இதை மீறி, நெடுமாறனால் தன் விமான நிறுவனத்தை செயல்பட வைக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.

மதுரை சோழவந்தானில் இருக்கும் பள்ளி ஆசிரியர் பூ ராமுவின் மகன் நெடுமாறன் ராஜாங்கத்தை கதாநாயகன் சூர்யா சுற்றியே கதை நகர்கிறது.

சில காலம் கழித்து கதாநாயகன் சூர்யாவுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

அதை அவர் அற்புதமாக பயன்படுத்தி திரைப்படம் பார்ப்பவர்களை கவர்கிறார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை காணச் செல்ல விமான நிலையத்தில் இருக்கும் பயணிகளிடம் பணம் கேட்டு பிச்சை எடுக்கும் காட்சியாக இருக்கட்டும், மனைவி பொம்மியிடம் கதாநாயகி அபர்ணா பாலமுரளி கடன் கேட்க தயங்குவதாக இருக்கட்டும் கதாநாயகன் சூர்யா அசத்தியிருக்கிறார்.

மாறா-பொம்மி உறவு படத்திற்கு பெரிய பலம். இருவருமே கனவுகளுடன் இருப்பவர்கள். பொம்மிக்கு பேக்கரி துவங்க வேண்டும் என்று ஆசை. மாறாவின் கனவுடன் ஒப்பிடுகையில் அது சிறியது தான். அறிமுக காட்சியிலேயே ரசிகர்களை கவர்கிறார்

கதாநாயகன் சூர்யா திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு விமானத்தை அத்துமீறி தரை இறக்குகிறார்.

கதாநாயகன் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் நினைவு எளிய மக்களையும் விமானத்தில் குறைந்த பணத்தில் பறக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் போராடி வருகிறார்.

ஏதாவது ஒரு வழியில், அந்த நேரத்தில் விமான பிஸினஸில் கொடிக்கட்டி பறக்கும் பரீஷ் என்பவரை கதாநாயகன் சூர்யா சந்தித்து தனது யோசனைகளை கூறுகிறார்

கதாநாயகன் சூர்யா தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்துவிட்டார், இப்படி ஒரு கம்பேக் கதாபாத்திற்காக தான் கதாநாயகன் சூர்யா காத்திருந்தார் போல, ஒவ்வொரு இடத்திலும் தன் முத்திரையை பதிக்கின்றாத்.

சூர்யாவிற்கு எளிய மக்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற யோசனை எப்படி வந்தது என்று காட்டும் இடம் அருமை. அதோடு தன் தந்தை இறக்கும் தருவாயில் இருக்க அவரை பார்க்க பணம் இல்லாமல் பயணம் செய்ய முடியாமல் அவர் கெஞ்சும் இடம் எத்தனை விருதுகளை வேண்டுமானாலும் கதாநாயகன் சூர்யாவிற்கு அள்ளிக்கொடுக்கலாம்.

சூர்யாவிற்கு போட்டியாக அபர்ணா பாலமுரளி பல இடங்களில் கவுண்டர் கொடுத்து கதாநாயகன் சூர்யாவையே திக்குமுக்காட வைக்கிறார்,

அதோடு தன் கணவன் கஷ்டத்தை அறிந்து கடைசி வரை கூட நிற்பது, ஆணுக்கு எந்த விதத்திலும் பெண் சளைத்தவள் இல்லை என்பதையும் காட்சியின் வழியே காட்டியுள்ளனர்.

இப்படம் ஏ செண்டர் ஆடியன்ஸுக்கானது என்று பலரும் சொன்னார்கள்.

ஆனால் அனைவருக்குமான படம் என்று அவ்வளவு பெரிய பிஸினஸ் மேனை உடுப்பி ஹோட்டகுக்கு அழைத்து வந்து விமான பிஸினஸை சூர்யா விவரிக்கும் இடம் தியேட்டராக இருந்தால் அப்லாஸ் அள்ளியிருக்கும்.

Read Also  மயூரன் - திரை விமர்சனம்

படம் ஒரு தனி நபர் பயோகிராபி தான் என்றாலும், அதை அனைவரும் ரசிக்கும்படி குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு ஒரு மோட்டிவேஷ்னலாக திரைக்கதையாக அமைத்தது சுதா கொங்கரா தனி முத்திரை பதித்துவிட்டார்.

காளி வெங்கட், கருணாஸ், ஊர்வசி, மோகன்பாபு, சூர்யாவின் அப்பவாக வருபவர் பூ ராமு என அனைவருமே நிறைவான நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.

பரீஷ், பாலையா என நிகழ்கால பிஸினஸ் மேன்களை தைரியமாக அவர்கள் முகத்திரையை கிழித்தது இயக்குநர் சுதாவின் பெரும் தைரியம்.

திரைப்படத்தின் திரைக்கதைக்கு உயிரோட்டமாக இருப்பது ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை அசுர பாய்ச்சல். ஒளிப்பதிவும் விமானத்தின் வேகத்திற்கு இணையாக படம் பிடித்துள்ளனர்,

குறிப்பாக சூர்யா தன் புல்லட்டில் விமானத்தை பார்த்துக்கொண்டே ஓட்டும் இடம்.

இப்படி பல ப்ளஸ் குவிந்து இருக்க ஒரு சில இடங்களில் ஊர் மக்கள் காட்டும் இடம் கொஞ்சம் செயற்கைத்தனமாக தெரிவதை தவிர்க்க முடியவில்லை.

சூர்யா நீண்ட நாட்களுக்கு பிறகு தன் நடிப்பை மிரட்டியுள்ளார்.

சுதாவின் திரைக்கதை அருமை

ஜி.வி இசை, சூப்பர் ஒளிப்பதிவு மிக அறுமை

திரைப்படத்தின் வசனங்கள், அதுவும் எளிய மக்களுக்காக புரியும் படி கதாநாயகன் சூர்யா பேசும் காட்சிகள்.

மதுரை காட்சிகளில் கொஞ்சம் செயற்கை தனம் தெரிகிறது.

மொத்தத்தில் உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகாது என்ற பழமொழியை மாற்றியுள்ளது

இந்த சூரரைப் போற்று  திரைப்படம் சூப்பர்

CLOSE
CLOSE