Sunday, July 12
Shadow

ஜிப்ரானுக்காக கமல்ஹாசனும் -அனிருதும் இனைத்த கூட்டணி.

உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் .

உலக நாயகன் கமல்ஹாசன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும்.

அதே போல் இதுநாள் வரை ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் பணியாற்றி வந்த இயக்குனர் ஷங்கர் முதன்முறையாக அனிருத்துடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார் அனிருத்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடலை கமல்ஹாசனும் அனிருத்தும் இணைந்து பாடியுள்ளனர்.

இப்பாடல் விரைவில் வெளியாக உள்ளது.