ஜிப்ஸி திரைப்படத்தில் சொந்தக்குரலில் டப்பிங் பேசிய இயக்குனர்

மலையாள திரையுலகில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மிக பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லால்ஜோஸ். கடந்த 15 வருடங்களில் தமிழ் சினிமாவிற்கு வந்து கோலோச்சி சென்ற பல மலையாள கதாநாயகிகளை அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர் இவர். தற்போது முதன் முதலாக ஜீவா நடிக்கும் ஜிப்ஸி படம் மூலம் ஒரு நடிகராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் லால்ஜோஸ்.

இந்த படத்தில் நடைபெறும் நடித்த அனுபவம் பற்றி லால்ஜோஸ் கூறும்போது, “என்னை இந்த படத்திற்கு அழைத்தபோது ஆள் மாற்றி அழைத்து விட்டார்களோ என்று தான் நினைத்தேன்.. மேலும் இந்த படத்தில் சின்ன கதாபாத்திரம் என நினைத்து வந்தால் மிகப்பெரிய கதாபாத்திரமாக கொடுத்துவிட்டார்கள். ஸ்பாட்டில் நடிகராக இருக்கும்போது பதட்டத்தில், படித்த வசனங்கள் எல்லாம் மறந்து விட்டன. ஷூட்டிங் முடிந்தபோது அப்பாடா தப்பித்தோம் என்று நினைத்தால் டப்பிங்கையும் நான் தான் பேசவேண்டும் என்று கூறியதால் வேறுவழியின்றி நானே டப்பிங் பேசியுள்ளேன்.. இந்த ஜிப்ஸி ஒரு அபூர்வ சினிமா” என்று பாராட்டியுள்ளார்.