தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் – நான்கு முனை போட்டி
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், இயக்குனர்கள் பி.வாசு, அமீர், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து இயக்குனர் சங்க தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவதால் திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.