தயாரிப்பாளர் சங்கத்தினர் என்னை அழிக்க பார்க்கிறார்கள் – வடிவேல்

நடிகர் வடிவேலு ‘பிரெண்ட்ஸ்’ படத்தில் நடித்த நேசமணி கதாபாத்திரம், கடந்த 2 நாட்களாக உலக அளவில் டிரெண்டிங் ஆனது. இந்நிலையில், நடிகர் வடிவேலு அளித்துள்ள பேட்டியில் “நான் வாழக்கூடாது, என்னை சாகடிக்கவேண்டும் என்று என்னை அழிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்கள்  முடிவு செய்துவிட்டார்கள். அதை பற்றி நான் கவலைபடவில்லை. எனது பங்களிப்பு இல்லாமல் அந்த ‘இம்சை அரசன் 24 புலிகேசி’ 2ம் பாகம் எடுக்க முடியாது. ஆனால் நான் சொல்கிறபடி மட்டும் நடிங்க என்று சொன்னால் என்ன அர்த்தம். இயக்குநர் என் இஷ்டத்துக்கு நடிக்கவிட்டது தான் “நேசமணி” ட்ரெண்ட் ஆனதற்கு காரணம்” என்று அவர் கூறியுள்ளார்.