தர்பார்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை துவக்கினார் சூப்பர் ஸ்டார் !*

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த தர்பார் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டப்பிங் பேசும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.