தர்பார் –  படத்தில் வில்லன் சுனில் ஷெட்டி

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்த கட்டப் படப்பிடிப்பு மே 29ம் தேதி முதல் மீண்டும் மும்பையில் ஆரம்பமாக உள்ளது.

இந்தப் படத்தின் மெயின் வில்லனாக யார் நடிக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஹிந்தி நடிகரான சுனில் ஷெட்டி தான் படத்தின் மெயின் வில்லனாக நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுனில் ஷெட்டி இதற்கு முன் தமிழில் 2001ல் வெளிவந்த ’12 பி’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘தர்பார்’ படம் மூலம் தமிழில் நடிக்க வருகிறார். ஒரு காலத்தில் ஹிந்தியில் முன்னணி ஹீரோவாக இருந்தவர், சமீப ஆண்டுகளில் குணச்சித்திர நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார்.

‘2.0’ படத்தில் ரஜினியின் வில்லனாக ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் நடித்தார். இப்போது சுனில் ஷெட்டி நடிக்க இருக்கிறார். இது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.