‘தலைவி’ படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு*

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார்.

இதே போல் கெளதவ் கெளதம் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரித்து வருகிறார். இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் ‘தலைவி’ படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.