தளபதி & மக்கள் செல்வன் நடிக்கும் ‘தளபதி 64′ பர்ஸ்ட் லுக் வெளியானது

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படவில்லை.

தற்காலிகமாக தளபதி 64 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் தளபதி விஜய்யுடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை தளபதி விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் தலைப்பை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
படத்தின் தலைப்பு இதுதான்… மாஸ்டர்