தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .

.இந்த  நலத்திட்ட விழா கள்ளக்குறிச்சி தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர்  பிரகாஷ்  அவர்களால் நடத்தப்பட்டது . மேலும்  தளபதி விஜய் மக்கள் இயக்க  மாநில  பொறுப்பாளர்   திரு. புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் திறந்து வைத்து நலதிட்ட உதவிகளான

தையல் இயந்திரம்  3 பேருக்கு ,ஹெல்மட்   200 பேருக்கு ,அரிசி 5 கிலோ – 700  பேருக்கு ,புடவை  500 பேருக்கு, 
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு  காக்கி துணி -150  பேருக்கு ,தொழிலார்களுக்கு  பச்சை நிற  துணி  100 பேருக்கு 
பூச்சிதெளிப்பான்  இயந்திரம்  15 பேருக்கு,  சில்வர் குடங்கள் 300 பேருக்கு  1300 பொதுமக்களுக்கு   அன்னதானம்  ஆகியவை வழங்கப்பட்டது . இந்த  நிகழ்ச்சிக்கு விழுப்புரம் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் பரணிபாலாஜி கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார் .