‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் விஜய்*

தளபதி விஜய்யின் 64வது படத்தை இயக்குனர் லோகேஷ் கணகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் தளங விஜய்யுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்க்கீஸ், நடிகை ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஸ்ரீமன் உள்பட பலர் நடிக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.